புதன், 25 மே, 2011

வேண்டாம் அம்மா இலவசம்

முதல்வரின் ஆட்சி நல்லாட்சியாக அமைந்து விடும் என்று பெரும் எதிர்பார்ப்பு. 
நானும் நம்புகிறேன். 
ஆனால்  மணல் கொள்ளை தடுப்பு, பள்ளி கட்டணம், போக்குவரத்து, இன்னபிற திட்டங்களை  உடனடியாக செயல் படுத்தாமல், சின்ன குழந்தையை போல 10th ,+12 மாணவர்கள் online -இல் பதிவு செய்து கொள்ள ஆணையிட்டுள்ளேன், மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளேன் என்று சொல்லி  கொண்டு இருக்கிறார். ஒரு மாநில முதல்வர் சொல்ல வேண்டிய விஷயமா இது? ஒரு சுற்றறிக்கையை வெளியிட கல்வி அலுவலருக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கும் உத்தரவிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்காமல் அதை ஒரு சாதனை திட்டம் போல சொல்லி கொண்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பில் பதவி ஏற்று இருக்கும் அவருக்கு அழகல்ல.
அவரின் முகம் பார்த்து, எதாவது ஒரு வளர்ச்சி திட்டம் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு நல்லன பல செய்வார் என்று நம்புகிறேன். 
தயவு செய்து இலவச லேப்டாப் இருபது கிலோ இலவச அரிசி என்று கவனம் செலுத்தாமல் உருப்படியான திட்டம் தேடுங்கள். உங்கள் தேர்தல் அறிக்கைக்காக யாரும் உங்களுக்கு ஒட்டு போட வில்லை. வார்த்தைக்கு வார்த்தை தேர்தல் அறிக்கை திட்டங்களை ஒன்றரை ஆண்டுக்குள் நிறை வேற்ற உழைக்க   வேண்டும் என்று உங்கள் MLA களுக்கு சொள்கிறீர்கலாம்.
உங்கள் அறிக்கைகளில் அந்த இலவசங்களை மட்டும் விட்டு விட்டு எதாவது வேலை வாய்ப்பு வழங்கும் திட்டங்கள் இருந்தால் நிறைவேற்றுங்கள்.
வேண்டாம் அம்மா இலவசம்.
 

வெள்ளி, 20 மே, 2011

தொடங்கியாயிற்று புதிய ஆட்சி

தொடங்கியாயிற்று புதிய ஆட்சி. முதல் நாளே எழு திட்டங்கள். அருமை. முதல் நாளே கலர் டிவி, ஒரு ரூபாய் அரிசி  தந்த கருணாநிதி அவர்களை அடித்து துரத்தி இருகிறார்கள் மக்கள். ஏன்? தேவை தாலிக்கு தங்கமோ,இருபது கிலோ இலவச அரிசியோ அல்ல.
வேலை வாய்ப்பு, தரமான கல்வி, சாலை வசதிகள், மணல் கொள்ளை தடுப்பு,ஏழைகளுக்கு  மருத்துவ வசதி, விலைவாசி கட்டுப்பாடு, சுகாதாரமான சுற்றுபுறம், இன்னும் பல ஆக்க பூர்வமான திட்டங்கள். உங்களுக்கு ஓட்டு போட்டது உங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும் கவர்ச்சி திட்டங்களுக்காக அல்ல, சென்ற ஆட்சியில் பெற முடியாத மேற் சொன்னவற்றை பெறவே என்று யார் சென்று முதல்வரிடம் கூறுவது? அவர் என்னவென்றால் இந்த கவர்ச்சி திட்டங்களை நிறை வேற்ற ஒரு தனி துறையையே அமைத்து இருக்கிறார். 
கோட்டைக்குள் ஓடி சென்று அவரிடம் இதை சொல்லலாமா என்று நினைக்கிறேன். எங்கே, அவர்தான்  மறுபடியும் வழக்கம் போல காவல் துறை இடமாற்றம், சட்டசபை இட மாற்றம் என்று அரசியலில் பிஸி ஆக இருக்கிறார்.பிரச்சினையே நல்லனவற்றை எடுத்து சொல்லக்கூடியவர்கள் அவர் அருகில் செல்ல முடிவதில்லை, அருகில் செல்பவர்களுக்கு மக்கள் பற்றி அக்கறை இல்லை.
இறைவன் தான்   அவர் கனவில் வந்து எதை மக்கள் எதிர் பார்கிறார்கள் என்று அவரிடம் சொல்ல வேண்டும். சொல்வாரா?

வியாழன், 21 ஏப்ரல், 2011

பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

இப்பொழுது எல்லாம் நம் தேசத்தை திட்டுவது ஒரு பேஷன் ஆகி விட்டது.
ஆம் பண்பாடு குறைந்து விட்டது. அநியாயம் அக்கிரமம் பெருகி விட்டது.
அதற்க்கு இப்படி தேசத்தை திட்டுபவர்கள் என்ன பரிகாரம் செய்து விட்டனர்.
அப்படிப்பட்ட நீங்கள் இங்கே பிறந்ததற்காக  வருதபடுகிறீர்கள் என்றால் அந்த தேசத்தில் வாழாதீர்கள், அப்படி இல்லை எனில் அந்த தேசத்தை திருத்த எதாவது செய்யுங்கள்.

*மக்கள் சேவை என்றால் என்ன என்றே தெரியாத அரசியல்வாதிகள்.
(ஏழைகளின் வாழ்வு  முன்னேற வாய்ப்பு தாருங்கள் என்று கெஞ்சி விட்டு, தேர்தல் முடிந்த மறுநாள் ஹெலிகாப்ட்டர்-இல் ஓய்வு எடுக்க மலை வாசஸ்தலம் சென்றாகி விட்டது. அங்கே சிறப்பான வரவேற்ப்பு வேறு. நீங்கள் ஒரு மாதம் ஓய்வு எடுக்கும் காசிற்கு ஒரு குடும்பம் ஒரு வருடம் சாப்பிடலாமே, இன்னொருவரின் குடும்பம் இந்தியாவை என்ன விலை என்று கேட்டு கொண்டிருக்கிறது, தேர்தல் நேரம் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மக்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறோம் என்றனர்) உண்மையிலேயே வருத்தம் தான், இந்த நாட்டில் இவர்களுக்கு மத்தியில் பிறந்ததற்காக அல்ல, இவர்களை கேட்க்க முடியவில்லையே என்று, திருத்த முடியவில்லையே என்று..

*மக்களிடம் ஆன்மீகம் என்ற பெயரால் ஏமாற்றும் சாமியார்கள், குருக்கள்
வருத்தம் தான் இந்த பகுத்தறிவு இல்லாத நாடு என்று அறிவாளிகள் கூறும் இந்தியாவில் பிறந்ததற்காக அல்ல, இந்த விஷ கிருமிகளை அழிக்க வழி இல்லாமல் இருக்கிறோமே, எளிதில் இவர்களிடம் ஏமாறும் இந்த மக்களுக்கு இவர்களை புரிய வைக்க வழி இல்லையே  என்று..

*சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பம் தன் வாழ்க்கை என்று ஜடமாக வாழும் இந்த மக்கள்.
( இவர்களுடன் சேர்ந்து என்னையும் இந்தியன் என்று கூறி கொள்ள வருத்தம் இல்லை, இவர்களை மாற்ற வழி தேடாமல் நாமும் ஜடமாகி விட்டோமே என்று வருத்தம் தான்.

எதற்கு எடுத்தாலும் வெளி நாட்டை புகழ்ந்து கொண்டிருக்கும் நபர்களே,
உண்மைதான், வெளி நாடுகளில் உள்ள எந்த சிறந்த  விஷயங்களும் இல்லை இங்கே, ஆனால் இது இந்தியா, நான் இந்தியன். நெஞ்சை நிமிர்த்தி மார் தட்டி சொல்லுவேன் நான் இந்தியன் என்று.
அங்கே அவர்கள் ஆதிவாசிகளாய் இருந்த பொழுது, நாம் அரசாங்கம்  நடத்திகொண்டிருந்தோம் என்பது எத்துனை பெரிய உண்மை.
எப்படி தவறு  செய்யலாம் தன் சந்தோசத்திற்காக என்று தான், உலகில் பிறந்த எந்த மனிதனும் சமயம்  பார்த்து காத்திருக்கிறான்.
ஆனால் வெளி நாடுகளில்  எல்லாம் அவன் தவறு செய்யும் சந்தர்பங்கள் ஏற்பட சட்டங்கள் அனுமதிப்பதில்லை.
குற்றங்களுக்கு உடனுக்குடன் தண்டனை தான்.
அரசு இயந்திரம் ஒழுங்காக செயல் பட செயல் பட மக்கள் ஒழுங்காகிரார்கள்.
எதோ  வெளிநாட்டில் வாழுபவர்கள் எல்லோரும் மனதில் தெய்வ நிலை அடைந்து விட்டதை போல பேசும்  நபர்களே, அவர்கள் ஒழுங்காக இல்லை, ஒழுங்காக இருக்கும் அளவு கண்காணிக்க படுகிறார்கள்.

அமெரிக்கா வில் வாழுவது சொர்கமா? உலகத்தையே  நரகமாக்கி விட்டு தங்கள் எல்லைக்குள் சொர்கத்தை உருவாக்கும் அந்த நாடு உங்கள் கண்களுக்கு இந்தியாவை விட சிறந்ததாக தெரிகிறதா?

ஈரான் அவர்களுக்கு என்ன பாவம் செய்தது, அரேபியாவில் என்னை வளங்களை கைப்பற்ற தடையாக இருக்கும் வளரவிட்டால் என்று எண்ணி, அதை எதிர்க்கிறது,
அதன் வளர்ச்சி  திட்டங்களில் தன் நட்பு நாடான இஸ்ரேல் மூலம் ஈரானின் தொழில்நுட்பங்களில் கணிப்பொறி  வைரஸ்களை அனுப்பி அவற்றை  சிதைத்து இருக்கிறது  அமெரிக்கா. எந்த நாட்டிற்க்கு சென்றாலும் அமெரிக்கர்கள் மற்றவர்களை எதோ வேறு ஒரு பிறவிகள் போல பார்கின்றனர்.நியூயார்க் நகர வீதிகளில் நானும் நடந்து இருக்கிறேன், ஹ்ம்ம் உலகம் சுடுகாடாக வேண்டும், உங்கள் நாடு பூங்காவாக வேண்டுமா?
இப்படி அமெரிக்கா வின் அக்கிரமம் எல்லை கடந்து  கொண்டிருப்பதை எழுதி மாளாது.

அவர்களின் போர் குணத்திற்கும் இலக்கியத்திற்கும் என்ன அம்பந்தம், நாங்கள் அவர்களின் மனநிலையும் இலக்கியத்தையும் வாழ்க்கை முறையையும் படுகிறோம் என்று கூறும் அறிவு ஜீவிகளே,

வியட்நாமில் மூன்று  லட்சம் ,ஜப்பானில்  இரண்டு  லட்சம் , ஆப்கானிஸ்தான், ஈராக் இல் ஒரு லட்சம், என்ன என்று பார்கிறீர்கள? அமெரிக்கா வின் வெறி தாக்குதலுக்கு செத்த அப்பாவிகளின் எண்ணிக்கை.
pearl harbour என்று எதோ அமைதி போராட்டம்  நடத்தியதை  போல ஒரு திரைப்படம் வேறு .
ஒரு  கடற்படை தளத்தை தாக்கியது ராணுவ நிகழ்வு, அதற்காக அப்பாவி பொது மக்களை ஜப்பானில் கொன்ற இந்த அமேரிக்க இலக்கியம் எனக்கு வேண்டாம்.
இந்த நிமிடம் வரை உலகில் எங்கே எந்த தேசத்தை கருவருக்க்லாம் அன்று பார்க்கும்  அந்த காதிபதியத்தின் புகழ் பாடுபவர்கள் பாடி கொள்ளட்டும், அதற்காக என் இந்த புண்ணிய பூமியை எந்த நாட்டுடனும் ஒப்பிட்டு தாழ்த்துவதை ஒத்து கொள்ள முடியாது.

அங்கே எல்லாம் ஒழுங்காக நடக்கிறதாம், நம் அமெரிக்கா புகழ் பாடும் அறிவு ஜீவிகளின் கருத்து.

காசு இருந்தால் எல்லாம் நடக்கும். சோமாலியாவில் எதுவுமே ஒழுங்காக  இல்லை நண்பர்களே, என் அவர்கள் மக்கள் இலையா, வளங்கள், தலைவர்கள்  இல்லை. அதனால் எதிலும் ஒழுங்கு இல்லை.
நம்மிடம் வளங்கள் இருந்தும் தலைவர்கள் இல்லை.
என்னடா சொல் வருகிறாய் என்கிறீர்களா?
தேசத்தின் குற்றம் அல்ல இது, தலைவர்களின் குற்றம், அவர்களை கேள்வி கேட்காத  மக்களின் குற்றம்.
கேட்டிருந்தால் தமிழ்நாட்டில் பாதியை ஒரு குடும்பமும், மீதியை இரு சகோதரிகளும் பங்கு போட்டு கொண்டிருப்பதை பார்த்து கொண்டு வாளாவிருப்போமா?

இனியும் அமைதியாய் இருந்தால், நாமும் சோமாலியர்களை போல் கடல் கொள்ளையில் ஈடு பட்டு தான் உயிர் வாழ வேண்டி இருக்கும், அப்பொழுதும்  இந்த அறிவு ஜீவிகள் அதற்க்கு என்ன காரணம் என்று பார்க்காமல், அமெரிக்கா வில் கடல் கொள்ளையே இல்லை தெரியுமா, இந்த இந்தியாவே இப்படிதான் என்று கூறி கொண்டிருப்பார்கள்.

நீங்கள்  எங்கே  இருந்தாலும்  சரி , உங்கள் செயல்களை பார்க்கும் மற்ற நாட்டினர் ஆஹா இவன் இந்தியன் என்று உங்களை பார்த்து நம் நாட்டின் மீது மரியாதை கொள்ள வேண்டும். அதை விடுத்து            நீங்களும் அவர்களுடன் சேர்ந்து இந்த இந்தியாவே இப்படிதான் என்று திட்டி கொண்டு இருக்காதீர்கள்.



ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

naveena gurukkal continuation..

இந்த நவீன குருக்கள்  எல்லோருக்கும் யோகசனமே பிரபலமடைய முக்கிய காரணமாக இருக்கிறது.
யோகாசனத்தை சிறந்த முறையில் படித்து கொண்டு, அதை வைத்து தன்னை சுற்றி யோகாசனத்தை கற்று கொள்ள வரும் மக்களிடம்  தன்னை ஒரு ஆன்மீக குருவாகவும், இறை தூதர் போன்றும்  போலியாக மாற்றி கொண்டு, ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர்.
யோகாசன வாத்தியார், ஆன்மீக குருவாகி நடிகையை பார்த்து ஜம்ப் பண்ணி எழுந்திருக்கிறார்.

நம்மிடம் உன்னை நீ அறிய வேண்டும், பரவச நிலை  அது இது என்று கதை விட வேண்டியது.
சரி நீங்கள் தான் குரு, பரமாத்மாவை உணர்ந்தவர்   ஒத்துகொள்கிறோம்,
ஆனால் எதற்கு உங்கள் சொற்பொழிவுகளுக்கு ஆயிரக்கணக்கில் காசு வாங்குகிறீர்கள்?
இந்த தன்னை அறியாத ஏழை பாமரர்களுக்கு இலவசமாக தன்னை அறிய உதவலாமே.

ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னார், பக்கி என்ற ஒரு குரு தன் ஒரு சொற்பொழிவுக்கு வசூலிக்கும் மொத்த கட்டணம் 5 கோடி.

அட எனதருமை முட்டாள் மக்களே, உனக்கு நீ உண்மையை இரு, சம்பாதிப்பதில் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவு, யாருக்கும் தீமை நினைக்காதே, எல்லோரையும் உன்னை போலவே நினைத்து நேசிக்க முயற்சி செய்.
இயற்கையை நேசி.
இதை விட நீ ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் தெரிந்து உணர்ந்து கிழிக்க  போவது ஒன்றும் இல்லை.

இவர்கள் தனக்கு வரும் வருமானத்தை காப்பாற்றி கொள்ள மரம் நடுதல் அப்படி இப்படி என்று சில காசுகளை தூக்கி வீசி மக்களையும் ஏமாற்றி அரசாங்கத்தையும் ஏமாற்றுகின்றனர்.
என்னுடைய கேள்வி எல்லாம் இதுதான். நீ உத்தமனாக இருந்தால் எதுக்கு டா உனக்கு பகட்டான வாழ்க்கை, கோடிக்கணக்கில் பணம், ஆடம்பரம்?

அவருடன் இருக்கும் பொழுது நான் ஒரு பரவசத்தை உணர்ந்தேன், அவர் இறைவன்  நமக்கு அளித்த பரிசு, என் வாழ்வே மாறி விட்டது   அப்படி இப்படி என்று பிரபலங்களின் பேட்டி.
இந்த திருட்டு பசங்க யாருமே ஏழை இல்லே என்பதும், ஏழைகள் வாழ்வு சிறக்க எந்த விதத்திலும் உதவுவதுவும் இல்லை என்பதும் சத்யமான உண்மை.
ஒரு பிரபல நடிகரின் தந்தை சொல்கிறார் தன் குருவை பற்றி, என் குடும்பத்தில் அமைதியே இல்லாமல் இருந்தது, இவரை சந்தித்த பிறகுதான் அமைதி கிடைத்தது என்று. அமைதி எப்படி இருக்கும், ரசிகர் என்ற பெயரில் மக்களை எப்படி முட்டாளாகி உபயோகபடுத்தி காசு சம்பாதிப்பது, அந்த காசை  காப்பற்றிக்கொள்ள, எப்படி அரசியலில் நுழைவது என்று மகனுக்கு அறிவுறுத்தி கொண்டிருந்தால், எப்படி கிடைக்கும் அமைதி.

அந்த குரு சொல்லி இருப்பார், ஒன்றும் தவறு இல்லை நீ சரியான வழியில் போகிறாய், மகிழ்ச்சியாக இரு,
இன்னும் நிறைய பேரை ஏமாற்று, நான் இருக்கிறேன் உனக்காக ஆண்டவனிடம் சிபாரிசு செய்ய என்று..

மனித தன்மையை உணருங்கள் உணருங்கள் என்று கோடிக்கணக்கில் காசு சம்பாதித்து விட்டு சொல்லி கொண்டு இருக்கும் இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு கோவில் திண்ணையில் ஒரு வேளை சோறு மட்டும் போட்டு இப்போ சொல்லுங்கள் உங்கள் பரமாத்மா விளக்கத்தை என்றால் அவர் வார்த்தையில் அப்பொழுது  நீங்கள் இறைவனை உணருவீர்களா?

எத்துனை காலம் தான் இப்படி போகுமோ நம் நாட்டில்..

சனி, 16 ஏப்ரல், 2011

naveena thathuva gnanigal

நேர்காணலுக்கு சென்ற பொழுது அந்த மேலாளர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்று வரும் ஒரு குருவின் பரம பக்தர் என்று அவர் அறை முழுதும் இருந்த குருவின் படம் காட்டியது. techical round முடிந்ததும் என்னிடம் அவர் இப்பொழுது உங்களிடம் சில முக்கியமான விஷயங்கள் என்றார். நான் ஆவலானேன். என்னுடைய தெய்வம் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்ன சொல்கிறார் என்றால், "ஒரு விவசாயி தன் நிலத்தில் எந்த அளவு உழைக்கிறானோ அந்த அளவுதான் விளைச்சல் இருக்கும், அதே போல நீங்களும் இந்த அலுவலகத்தில் எந்த அளவு உழைக்கிறீர்களோ அந்த அளவு உங்களுக்கு பலன் இருக்கும், என் குரு எத்துனை  பெரிய விஷயம் சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா, நீங்களும் இந்த நிமிடம் முதல் அவரின் பக்தர் ஆகி இருப்பீர்களே என்றார். அவரை பார்க்க பாவமாக இருந்தது. 
ஏன்டா இந்த கருத்தை இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் வரும் சிறு கதைகள் கூட சொல்கிறதே, முன்னோர்கள் "உழைப்பே உயர்வு"அன்று இதை தானே இரண்டே வார்த்தையில் சொல்லி இருக்கிறார்கள். 
இதை சொல்ல ஒரு ஆள், இந்த கருத்தை அவர் கூறியதால், அவரை தெய்வம் என்று கூற சிலர். 
மாக்கா பசங்க.

naveena yuga gnanigal

இந்த நவீன யுக ஞானிகள் என் பிரபலமாகவும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாகவும்  ஆகிறார்கள் என்பதற்கு ஒரு விடை கிடைத்தது. 
நம் மனதிற்கு  எவை  எல்லாம் தவறு என்று தெரிந்தும் அதை செய்து விட்டு வருத்தபடுகிறோமோ, இந்த நவீன குருக்கள் அவை எல்லாம் தவறு அல்ல, மனித இயல்புதான் நீங்கள் அதை செய்யலாம் என்று நமக்கு சமாதானம் கூறுகிறார்கள். நம் செய்வதை தவறு என்று சுட்டி காட்டும் நண்பனை விட நீ செய்டா, நான் இருக்கிறேன் என்று கூறும் நண்பனைத்தான் நாம் அதிகம் விரும்புவோம். இதை புரிந்து கொண்டு ஆசைப்படு, சந்தோசமாக இரு என்று ஏத்திவிட்டு பிழைக்கிறார்கள்.இவர்கள் சொல்வதை எல்லாம் சற்று கவனித்தால், நம் வரலாறுகளில் மனித வாழ்க்கைக்கு தேவை என்று கூற பட்டு இருப்பதை சற்று மாற்றம் செய்து, தனக்கே உரிய எளிய நடையில் அதை எளிதாக்கி எதோ இறைவன் இவர்கள் காதுகளில் சொல்லியதை போல நம்மிடம் ஒரு பிரம்மையை தங்களின் பேச்சு திறமை மூலம் உண்டாக்கி மக்களை மயக்குகிறார்கள். ஏன்டா நீதான் இறைவனின் தூதன் என்றால், அல்லது இறைவன்க்கு மிகவும் நெருக்கமானவன் என்றால் நடக்கும் அநியாயங்களை தடுத்து நிறுத்து, ஏழைகளுக்கு வாழ்வு அளி. ஊழல் அரசியல்வாதிகளை அம்பலபடுத்து. மழை பெய்ய வைத்து பஞ்சத்தை  போக்கு. வேலை வாய்ப்பு ஏற்படுத்து. பசியை போக்கு. அதை விடுத்து ஆட்டம்,பாட்டு, யோக நிலை. திருட்டு பசங்க. இவனுங்களை ஒழித்தாலே நாடு உருப்படும்.  

jeyakanthan's short story

நேற்று திரு ஜெயகாந்தன் அவர்களின் "யுக சந்தி" என்ற சிறு கதை படித்தேன்.
ஆஹா என்ன ஒரு நடை, கருத்து செறிவு, ஆழம்.
லிங்க்: http://www.scribd.com/doc/3181674/Tamil-Stories-Jayakanthan-Sirukathaigal

அதுவும் அந்த கடைசி இரண்டு வரிகள் அற்புதம்.

பெருமையாக சொல்லி கொள்ள முடியும் எப்படி எங்கள் தமிழ் கதைகளும், எழுத்தாளர்களும் என்று.

இங்கே எங்களுக்கு online இல் கிடைக்கும் இதை போன்ற சிறுகதைகள் தான் எனக்கும் இந்த பாலைவனத்தில் வேலை செய்யும் மற்ற தமிழர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி.
ஆனால் online இல் படிப்பதை வெறுக்கிறேன்.
புத்தகத்தில் படிப்பதில் எத்துனை மகிழ்ச்சியாக இருக்கும்.  வேகமாக படிப்பது, அந்த புத்தக வாசனை, அப்படியே தென்னை மர காற்றில் அப்படியே அந்த கதையில் உயிரோட்டத்துடன் கலந்து..  என்ற எந்த பிடித்த விஷயங்களும் இல்லாமல் கண் வலியுடன் லேப்டாப் இல் படிப்பதை வெறுத்தாலும், வேறு வழி இல்லை.
இப்படியும் வாழ்க்கை.

VAAKKALA PERUMAGAN

என்னை முன்னாள் இந்நாள் முதல்வர்கள் இருவரும் வாக்காள பெருமகனே என்று கைகூப்பி வணங்குகிறார்கள்.
நான் அதற்கு தகுதியானவனா? பெருமகன் ஆவது இருக்கட்டும். நான் ஒரு மனிதனா முதலில்?
என்னை ஏமாற்றி கொள்ளை அடித்து மாளிகை வாங்கி, கார் வாங்கி எஸ்டேட் வாங்கி
தமிழ் நாட்டையே  முறை வைத்து கொள்ளை அடிக்கும் இந்த கூட்டம் மீண்டும் ஒரு முறை என் வீடு தேடி வந்து உன்னை கொள்ளை அடிக்க மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தா என்று கேட்க்கும் பொழுது அவர்களின் சொக்காயை  பிடித்து கேள்வி கேட்க்க திராணி இல்லாத நானும் ஒரு மானம் உள்ள மனிதனா? என்னை விடுங்கள் கொள்ளை அடிக்க அடிக்க சம்பாதித்து கொள்ளவாவது வழி இருக்கிறது. பாவம் ஏழை மக்களின் வயிற்றில் அடித்து ஏன்டா வயிறு வளர்கிறீர்கள் என்றாவது கேட்டு இருக்கலாம். எப்படி கேட்க்க முடியும்.
அவன் திருப்பி கேட்பானே, அதற்கு தான்டா உனக்கு இலவச அறிவிப்புகள். வாயை மூடு என்று சொல்வானே.
தெருவில் AC காரில் அமர்ந்து கொண்டு உங்கள் வீட்டு வேலைகாரனாக வாய்ப்பு தாருங்கள் என்று சொல்வதையும் நம்பி கொண்டு, இந்த முறை ஓட்டு போட்டால் எதாவது அதிசயம் நடந்து நம் வாழ்வு மாறி விடும் என்று நம்பும் இந்த ஏழை பராதிகளை ஏமாற்ற எப்படித்தான் மனது வருகிறது உங்களுக்கு என்று கேட்க்க வகை  இல்லாத மானம் கேட்டவன் நான்.
ஒரு குடும்பம் நாட்டையே கொள்ளை அடிக்கிறது என்று சொல்பவர்களும் அவர்கள் பின்னால் தனது நட்பின் குடும்பத்தை வைத்து இருக்கிறார்கள். எப்படியோ மக்களின் குடும்பங்களை தவிர ஆட்சியாளர்களின் குடும்பங்கள் மட்டுமே வாழும் என்பதுதான் எந்த ஆட்சி வந்தாலும் நடக்க போவது என்று உணர்ந்து இருந்தும் எதுவும் செய்ய தலைபடாத வெக்கம் கேட்ட குடிமகன் நான்.
நமது வரிபணத்தில் ஊதியம் வாங்குகிறார்கள் என்பது மட்டும் இல்லாமல் இந்திய நாட்டின் பெயரை தாங்கி விளையாடுகிறார்கள் என்ற காரணத்திற்காக இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவர் சரியாக ஆட விட்டாலும், அது என் வாழ்வாதாரத்தை பாதிக்க போவது இல்லை என்றாலும் கோபப்படும் நான், இதோ பல அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு தன் பணியை சரியாக செய்யாமல் மேலும் அந்த பதவியை பயன்படுத்தி நம்மை ஏமாற்றும் மனிதர்களை கேள்வி கேக்க முடியவில்லையே.
உயிர் மற்றும் மானம் போய்விடும் என்ற பயம்.
இந்த பயபேய் பிடித்து ஆட்டுவதால் என்னால் இந்த பணபேய் பிடித்து ஆடும் அரசியல்வாதிகளை கேள்வி கேக்க முடியவில்லை.
இவர்கள் ஆட்சியில் நீங்கள் கஷ்டபடுகிறீர்கள், ஆமா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்கதானே ஆட்சி பண்ணீங்க, அப்போ சந்தோசமா இருந்தோமா?
இருக்கல. ஆன அப்போ சந்தோசமா இல்லேங்கரத இப்போ மறந்துட்டோம். அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சு இதே பஜனை அந்த கட்சிகிட்ட இருந்து.
கேக்க முடியல.
இவர்கள் சொல்வது எல்லாம் பொய் என்று தெரிந்து இருந்தும் கை தட்டி ஆர்பரிக்கிரதே கூட்டம், அது எப்படி?
எனதருமை தாயகமே தமிழகமே உன்னை கொள்ளை அடிக்கும் இவர்களை அப்படியே நீ வாய் பிளந்து  பூமியில் விழுங்கி விட கூடாதா?
சுயேட்சையாக எனது தொகுதியில் நின்று வென்று சட்டசபைக்கு சென்று அங்கே ஒருவர் விடாமல் எல்லாரிடமும் கேள்வி கேக்க வேண்டும் என்று ஆசை. வெல்வது இருக்கட்டும் முதலில் சுயேச்சையாக நிற்பதற்கே,
என் அப்பா செருப்பால் அடிப்பேன் என்கிறார். அம்மா அழுது தீர்க்கிறார்.
ஆனாலும் எதாவது செய்ய வேண்டும்.
எதுவுமே செய்ய விட்டாலும் இந்த பெரும் தலைவர்களை வீதியில் வைத்தே கூடத்திற்கு முன்னால் கேள்வி கேக்க வேண்டும்.
அங்கேயே அவர்களுக்காக தான் பேசுகிறேன் என்று கூட புரிந்து கொள்ளாமல் மக்களே அடித்து என்னை கொன்று விடுவார்கள் என்பது எனக்கு தெரியும்.
இப்படி வக்கு இல்லாத வாக்களனாக வாழ்வதை விட இறக்க தயாராக இருக்கிறேன்.
தயவு செய்து எனது சவத்தைஆவது எனது பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள்.
 உங்கள் தலைவர்களை கேள்வி கேட்டதற்காக அனாதையாக தெருவில் வீசி விடாதீர்கள்.