இப்பொழுது எல்லாம் நம் தேசத்தை திட்டுவது ஒரு பேஷன் ஆகி விட்டது.
ஆம் பண்பாடு குறைந்து விட்டது. அநியாயம் அக்கிரமம் பெருகி விட்டது.
அதற்க்கு இப்படி தேசத்தை திட்டுபவர்கள் என்ன பரிகாரம் செய்து விட்டனர்.
அப்படிப்பட்ட நீங்கள் இங்கே பிறந்ததற்காக வருதபடுகிறீர்கள் என்றால் அந்த தேசத்தில் வாழாதீர்கள், அப்படி இல்லை எனில் அந்த தேசத்தை திருத்த எதாவது செய்யுங்கள்.
*மக்கள் சேவை என்றால் என்ன என்றே தெரியாத அரசியல்வாதிகள்.
(ஏழைகளின் வாழ்வு முன்னேற வாய்ப்பு தாருங்கள் என்று கெஞ்சி விட்டு, தேர்தல் முடிந்த மறுநாள் ஹெலிகாப்ட்டர்-இல் ஓய்வு எடுக்க மலை வாசஸ்தலம் சென்றாகி விட்டது. அங்கே சிறப்பான வரவேற்ப்பு வேறு. நீங்கள் ஒரு மாதம் ஓய்வு எடுக்கும் காசிற்கு ஒரு குடும்பம் ஒரு வருடம் சாப்பிடலாமே, இன்னொருவரின் குடும்பம் இந்தியாவை என்ன விலை என்று கேட்டு கொண்டிருக்கிறது, தேர்தல் நேரம் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மக்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறோம் என்றனர்) உண்மையிலேயே வருத்தம் தான், இந்த நாட்டில் இவர்களுக்கு மத்தியில் பிறந்ததற்காக அல்ல, இவர்களை கேட்க்க முடியவில்லையே என்று, திருத்த முடியவில்லையே என்று..
*மக்களிடம் ஆன்மீகம் என்ற பெயரால் ஏமாற்றும் சாமியார்கள், குருக்கள்
வருத்தம் தான் இந்த பகுத்தறிவு இல்லாத நாடு என்று அறிவாளிகள் கூறும் இந்தியாவில் பிறந்ததற்காக அல்ல, இந்த விஷ கிருமிகளை அழிக்க வழி இல்லாமல் இருக்கிறோமே, எளிதில் இவர்களிடம் ஏமாறும் இந்த மக்களுக்கு இவர்களை புரிய வைக்க வழி இல்லையே என்று..
*சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பம் தன் வாழ்க்கை என்று ஜடமாக வாழும் இந்த மக்கள்.
( இவர்களுடன் சேர்ந்து என்னையும் இந்தியன் என்று கூறி கொள்ள வருத்தம் இல்லை, இவர்களை மாற்ற வழி தேடாமல் நாமும் ஜடமாகி விட்டோமே என்று வருத்தம் தான்.
எதற்கு எடுத்தாலும் வெளி நாட்டை புகழ்ந்து கொண்டிருக்கும் நபர்களே,
உண்மைதான், வெளி நாடுகளில் உள்ள எந்த சிறந்த விஷயங்களும் இல்லை இங்கே, ஆனால் இது இந்தியா, நான் இந்தியன். நெஞ்சை நிமிர்த்தி மார் தட்டி சொல்லுவேன் நான் இந்தியன் என்று.
அங்கே அவர்கள் ஆதிவாசிகளாய் இருந்த பொழுது, நாம் அரசாங்கம் நடத்திகொண்டிருந்தோம் என்பது எத்துனை பெரிய உண்மை.
எப்படி தவறு செய்யலாம் தன் சந்தோசத்திற்காக என்று தான், உலகில் பிறந்த எந்த மனிதனும் சமயம் பார்த்து காத்திருக்கிறான்.
ஆனால் வெளி நாடுகளில் எல்லாம் அவன் தவறு செய்யும் சந்தர்பங்கள் ஏற்பட சட்டங்கள் அனுமதிப்பதில்லை.
குற்றங்களுக்கு உடனுக்குடன் தண்டனை தான்.
அரசு இயந்திரம் ஒழுங்காக செயல் பட செயல் பட மக்கள் ஒழுங்காகிரார்கள்.
எதோ வெளிநாட்டில் வாழுபவர்கள் எல்லோரும் மனதில் தெய்வ நிலை அடைந்து விட்டதை போல பேசும் நபர்களே, அவர்கள் ஒழுங்காக இல்லை, ஒழுங்காக இருக்கும் அளவு கண்காணிக்க படுகிறார்கள்.
அமெரிக்கா வில் வாழுவது சொர்கமா? உலகத்தையே நரகமாக்கி விட்டு தங்கள் எல்லைக்குள் சொர்கத்தை உருவாக்கும் அந்த நாடு உங்கள் கண்களுக்கு இந்தியாவை விட சிறந்ததாக தெரிகிறதா?
ஈரான் அவர்களுக்கு என்ன பாவம் செய்தது, அரேபியாவில் என்னை வளங்களை கைப்பற்ற தடையாக இருக்கும் வளரவிட்டால் என்று எண்ணி, அதை எதிர்க்கிறது,
அதன் வளர்ச்சி திட்டங்களில் தன் நட்பு நாடான இஸ்ரேல் மூலம் ஈரானின் தொழில்நுட்பங்களில் கணிப்பொறி வைரஸ்களை அனுப்பி அவற்றை சிதைத்து இருக்கிறது அமெரிக்கா. எந்த நாட்டிற்க்கு சென்றாலும் அமெரிக்கர்கள் மற்றவர்களை எதோ வேறு ஒரு பிறவிகள் போல பார்கின்றனர்.நியூயார்க் நகர வீதிகளில் நானும் நடந்து இருக்கிறேன், ஹ்ம்ம் உலகம் சுடுகாடாக வேண்டும், உங்கள் நாடு பூங்காவாக வேண்டுமா?
இப்படி அமெரிக்கா வின் அக்கிரமம் எல்லை கடந்து கொண்டிருப்பதை எழுதி மாளாது.
அவர்களின் போர் குணத்திற்கும் இலக்கியத்திற்கும் என்ன அம்பந்தம், நாங்கள் அவர்களின் மனநிலையும் இலக்கியத்தையும் வாழ்க்கை முறையையும் படுகிறோம் என்று கூறும் அறிவு ஜீவிகளே,
வியட்நாமில் மூன்று லட்சம் ,ஜப்பானில் இரண்டு லட்சம் , ஆப்கானிஸ்தான், ஈராக் இல் ஒரு லட்சம், என்ன என்று பார்கிறீர்கள? அமெரிக்கா வின் வெறி தாக்குதலுக்கு செத்த அப்பாவிகளின் எண்ணிக்கை.
pearl harbour என்று எதோ அமைதி போராட்டம் நடத்தியதை போல ஒரு திரைப்படம் வேறு .
ஒரு கடற்படை தளத்தை தாக்கியது ராணுவ நிகழ்வு, அதற்காக அப்பாவி பொது மக்களை ஜப்பானில் கொன்ற இந்த அமேரிக்க இலக்கியம் எனக்கு வேண்டாம்.
இந்த நிமிடம் வரை உலகில் எங்கே எந்த தேசத்தை கருவருக்க்லாம் அன்று பார்க்கும் அந்த காதிபதியத்தின் புகழ் பாடுபவர்கள் பாடி கொள்ளட்டும், அதற்காக என் இந்த புண்ணிய பூமியை எந்த நாட்டுடனும் ஒப்பிட்டு தாழ்த்துவதை ஒத்து கொள்ள முடியாது.
அங்கே எல்லாம் ஒழுங்காக நடக்கிறதாம், நம் அமெரிக்கா புகழ் பாடும் அறிவு ஜீவிகளின் கருத்து.
காசு இருந்தால் எல்லாம் நடக்கும். சோமாலியாவில் எதுவுமே ஒழுங்காக இல்லை நண்பர்களே, என் அவர்கள் மக்கள் இலையா, வளங்கள், தலைவர்கள் இல்லை. அதனால் எதிலும் ஒழுங்கு இல்லை.
நம்மிடம் வளங்கள் இருந்தும் தலைவர்கள் இல்லை.
என்னடா சொல் வருகிறாய் என்கிறீர்களா?
தேசத்தின் குற்றம் அல்ல இது, தலைவர்களின் குற்றம், அவர்களை கேள்வி கேட்காத மக்களின் குற்றம்.
கேட்டிருந்தால் தமிழ்நாட்டில் பாதியை ஒரு குடும்பமும், மீதியை இரு சகோதரிகளும் பங்கு போட்டு கொண்டிருப்பதை பார்த்து கொண்டு வாளாவிருப்போமா?
இனியும் அமைதியாய் இருந்தால், நாமும் சோமாலியர்களை போல் கடல் கொள்ளையில் ஈடு பட்டு தான் உயிர் வாழ வேண்டி இருக்கும், அப்பொழுதும் இந்த அறிவு ஜீவிகள் அதற்க்கு என்ன காரணம் என்று பார்க்காமல், அமெரிக்கா வில் கடல் கொள்ளையே இல்லை தெரியுமா, இந்த இந்தியாவே இப்படிதான் என்று கூறி கொண்டிருப்பார்கள்.
நீங்கள் எங்கே இருந்தாலும் சரி , உங்கள் செயல்களை பார்க்கும் மற்ற நாட்டினர் ஆஹா இவன் இந்தியன் என்று உங்களை பார்த்து நம் நாட்டின் மீது மரியாதை கொள்ள வேண்டும். அதை விடுத்து நீங்களும் அவர்களுடன் சேர்ந்து இந்த இந்தியாவே இப்படிதான் என்று திட்டி கொண்டு இருக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக