சனி, 16 ஏப்ரல், 2011

VAAKKALA PERUMAGAN

என்னை முன்னாள் இந்நாள் முதல்வர்கள் இருவரும் வாக்காள பெருமகனே என்று கைகூப்பி வணங்குகிறார்கள்.
நான் அதற்கு தகுதியானவனா? பெருமகன் ஆவது இருக்கட்டும். நான் ஒரு மனிதனா முதலில்?
என்னை ஏமாற்றி கொள்ளை அடித்து மாளிகை வாங்கி, கார் வாங்கி எஸ்டேட் வாங்கி
தமிழ் நாட்டையே  முறை வைத்து கொள்ளை அடிக்கும் இந்த கூட்டம் மீண்டும் ஒரு முறை என் வீடு தேடி வந்து உன்னை கொள்ளை அடிக்க மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தா என்று கேட்க்கும் பொழுது அவர்களின் சொக்காயை  பிடித்து கேள்வி கேட்க்க திராணி இல்லாத நானும் ஒரு மானம் உள்ள மனிதனா? என்னை விடுங்கள் கொள்ளை அடிக்க அடிக்க சம்பாதித்து கொள்ளவாவது வழி இருக்கிறது. பாவம் ஏழை மக்களின் வயிற்றில் அடித்து ஏன்டா வயிறு வளர்கிறீர்கள் என்றாவது கேட்டு இருக்கலாம். எப்படி கேட்க்க முடியும்.
அவன் திருப்பி கேட்பானே, அதற்கு தான்டா உனக்கு இலவச அறிவிப்புகள். வாயை மூடு என்று சொல்வானே.
தெருவில் AC காரில் அமர்ந்து கொண்டு உங்கள் வீட்டு வேலைகாரனாக வாய்ப்பு தாருங்கள் என்று சொல்வதையும் நம்பி கொண்டு, இந்த முறை ஓட்டு போட்டால் எதாவது அதிசயம் நடந்து நம் வாழ்வு மாறி விடும் என்று நம்பும் இந்த ஏழை பராதிகளை ஏமாற்ற எப்படித்தான் மனது வருகிறது உங்களுக்கு என்று கேட்க்க வகை  இல்லாத மானம் கேட்டவன் நான்.
ஒரு குடும்பம் நாட்டையே கொள்ளை அடிக்கிறது என்று சொல்பவர்களும் அவர்கள் பின்னால் தனது நட்பின் குடும்பத்தை வைத்து இருக்கிறார்கள். எப்படியோ மக்களின் குடும்பங்களை தவிர ஆட்சியாளர்களின் குடும்பங்கள் மட்டுமே வாழும் என்பதுதான் எந்த ஆட்சி வந்தாலும் நடக்க போவது என்று உணர்ந்து இருந்தும் எதுவும் செய்ய தலைபடாத வெக்கம் கேட்ட குடிமகன் நான்.
நமது வரிபணத்தில் ஊதியம் வாங்குகிறார்கள் என்பது மட்டும் இல்லாமல் இந்திய நாட்டின் பெயரை தாங்கி விளையாடுகிறார்கள் என்ற காரணத்திற்காக இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவர் சரியாக ஆட விட்டாலும், அது என் வாழ்வாதாரத்தை பாதிக்க போவது இல்லை என்றாலும் கோபப்படும் நான், இதோ பல அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு தன் பணியை சரியாக செய்யாமல் மேலும் அந்த பதவியை பயன்படுத்தி நம்மை ஏமாற்றும் மனிதர்களை கேள்வி கேக்க முடியவில்லையே.
உயிர் மற்றும் மானம் போய்விடும் என்ற பயம்.
இந்த பயபேய் பிடித்து ஆட்டுவதால் என்னால் இந்த பணபேய் பிடித்து ஆடும் அரசியல்வாதிகளை கேள்வி கேக்க முடியவில்லை.
இவர்கள் ஆட்சியில் நீங்கள் கஷ்டபடுகிறீர்கள், ஆமா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்கதானே ஆட்சி பண்ணீங்க, அப்போ சந்தோசமா இருந்தோமா?
இருக்கல. ஆன அப்போ சந்தோசமா இல்லேங்கரத இப்போ மறந்துட்டோம். அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சு இதே பஜனை அந்த கட்சிகிட்ட இருந்து.
கேக்க முடியல.
இவர்கள் சொல்வது எல்லாம் பொய் என்று தெரிந்து இருந்தும் கை தட்டி ஆர்பரிக்கிரதே கூட்டம், அது எப்படி?
எனதருமை தாயகமே தமிழகமே உன்னை கொள்ளை அடிக்கும் இவர்களை அப்படியே நீ வாய் பிளந்து  பூமியில் விழுங்கி விட கூடாதா?
சுயேட்சையாக எனது தொகுதியில் நின்று வென்று சட்டசபைக்கு சென்று அங்கே ஒருவர் விடாமல் எல்லாரிடமும் கேள்வி கேக்க வேண்டும் என்று ஆசை. வெல்வது இருக்கட்டும் முதலில் சுயேச்சையாக நிற்பதற்கே,
என் அப்பா செருப்பால் அடிப்பேன் என்கிறார். அம்மா அழுது தீர்க்கிறார்.
ஆனாலும் எதாவது செய்ய வேண்டும்.
எதுவுமே செய்ய விட்டாலும் இந்த பெரும் தலைவர்களை வீதியில் வைத்தே கூடத்திற்கு முன்னால் கேள்வி கேக்க வேண்டும்.
அங்கேயே அவர்களுக்காக தான் பேசுகிறேன் என்று கூட புரிந்து கொள்ளாமல் மக்களே அடித்து என்னை கொன்று விடுவார்கள் என்பது எனக்கு தெரியும்.
இப்படி வக்கு இல்லாத வாக்களனாக வாழ்வதை விட இறக்க தயாராக இருக்கிறேன்.
தயவு செய்து எனது சவத்தைஆவது எனது பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள்.
 உங்கள் தலைவர்களை கேள்வி கேட்டதற்காக அனாதையாக தெருவில் வீசி விடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக