முதல்வரின் ஆட்சி நல்லாட்சியாக அமைந்து விடும் என்று பெரும் எதிர்பார்ப்பு.
நானும் நம்புகிறேன்.
ஆனால் மணல் கொள்ளை தடுப்பு, பள்ளி கட்டணம், போக்குவரத்து, இன்னபிற திட்டங்களை உடனடியாக செயல் படுத்தாமல், சின்ன குழந்தையை போல 10th ,+12 மாணவர்கள் online -இல் பதிவு செய்து கொள்ள ஆணையிட்டுள்ளேன், மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். ஒரு மாநில முதல்வர் சொல்ல வேண்டிய விஷயமா இது? ஒரு சுற்றறிக்கையை வெளியிட கல்வி அலுவலருக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கும் உத்தரவிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்காமல் அதை ஒரு சாதனை திட்டம் போல சொல்லி கொண்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பில் பதவி ஏற்று இருக்கும் அவருக்கு அழகல்ல.
அவரின் முகம் பார்த்து, எதாவது ஒரு வளர்ச்சி திட்டம் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு நல்லன பல செய்வார் என்று நம்புகிறேன்.
தயவு செய்து இலவச லேப்டாப் இருபது கிலோ இலவச அரிசி என்று கவனம் செலுத்தாமல் உருப்படியான திட்டம் தேடுங்கள். உங்கள் தேர்தல் அறிக்கைக்காக யாரும் உங்களுக்கு ஒட்டு போட வில்லை. வார்த்தைக்கு வார்த்தை தேர்தல் அறிக்கை திட்டங்களை ஒன்றரை ஆண்டுக்குள் நிறை வேற்ற உழைக்க வேண்டும் என்று உங்கள் MLA களுக்கு சொள்கிறீர்கலாம்.
உங்கள் அறிக்கைகளில் அந்த இலவசங்களை மட்டும் விட்டு விட்டு எதாவது வேலை வாய்ப்பு வழங்கும் திட்டங்கள் இருந்தால் நிறைவேற்றுங்கள்.
வேண்டாம் அம்மா இலவசம்.
வேண்டாம் அம்மா இலவசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக