இந்த நவீன குருக்கள் எல்லோருக்கும் யோகசனமே பிரபலமடைய முக்கிய காரணமாக இருக்கிறது.
யோகாசனத்தை சிறந்த முறையில் படித்து கொண்டு, அதை வைத்து தன்னை சுற்றி யோகாசனத்தை கற்று கொள்ள வரும் மக்களிடம் தன்னை ஒரு ஆன்மீக குருவாகவும், இறை தூதர் போன்றும் போலியாக மாற்றி கொண்டு, ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர்.
யோகாசன வாத்தியார், ஆன்மீக குருவாகி நடிகையை பார்த்து ஜம்ப் பண்ணி எழுந்திருக்கிறார்.
நம்மிடம் உன்னை நீ அறிய வேண்டும், பரவச நிலை அது இது என்று கதை விட வேண்டியது.
சரி நீங்கள் தான் குரு, பரமாத்மாவை உணர்ந்தவர் ஒத்துகொள்கிறோம்,
ஆனால் எதற்கு உங்கள் சொற்பொழிவுகளுக்கு ஆயிரக்கணக்கில் காசு வாங்குகிறீர்கள்?
இந்த தன்னை அறியாத ஏழை பாமரர்களுக்கு இலவசமாக தன்னை அறிய உதவலாமே.
ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னார், பக்கி என்ற ஒரு குரு தன் ஒரு சொற்பொழிவுக்கு வசூலிக்கும் மொத்த கட்டணம் 5 கோடி.
அட எனதருமை முட்டாள் மக்களே, உனக்கு நீ உண்மையை இரு, சம்பாதிப்பதில் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவு, யாருக்கும் தீமை நினைக்காதே, எல்லோரையும் உன்னை போலவே நினைத்து நேசிக்க முயற்சி செய்.
இயற்கையை நேசி.
இதை விட நீ ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் தெரிந்து உணர்ந்து கிழிக்க போவது ஒன்றும் இல்லை.
இவர்கள் தனக்கு வரும் வருமானத்தை காப்பாற்றி கொள்ள மரம் நடுதல் அப்படி இப்படி என்று சில காசுகளை தூக்கி வீசி மக்களையும் ஏமாற்றி அரசாங்கத்தையும் ஏமாற்றுகின்றனர்.
என்னுடைய கேள்வி எல்லாம் இதுதான். நீ உத்தமனாக இருந்தால் எதுக்கு டா உனக்கு பகட்டான வாழ்க்கை, கோடிக்கணக்கில் பணம், ஆடம்பரம்?
அவருடன் இருக்கும் பொழுது நான் ஒரு பரவசத்தை உணர்ந்தேன், அவர் இறைவன் நமக்கு அளித்த பரிசு, என் வாழ்வே மாறி விட்டது அப்படி இப்படி என்று பிரபலங்களின் பேட்டி.
இந்த திருட்டு பசங்க யாருமே ஏழை இல்லே என்பதும், ஏழைகள் வாழ்வு சிறக்க எந்த விதத்திலும் உதவுவதுவும் இல்லை என்பதும் சத்யமான உண்மை.

ஒரு பிரபல நடிகரின் தந்தை சொல்கிறார் தன் குருவை பற்றி, என் குடும்பத்தில் அமைதியே இல்லாமல் இருந்தது, இவரை சந்தித்த பிறகுதான் அமைதி கிடைத்தது என்று. அமைதி எப்படி இருக்கும், ரசிகர் என்ற பெயரில் மக்களை எப்படி முட்டாளாகி உபயோகபடுத்தி காசு சம்பாதிப்பது, அந்த காசை காப்பற்றிக்கொள்ள, எப்படி அரசியலில் நுழைவது என்று மகனுக்கு அறிவுறுத்தி கொண்டிருந்தால், எப்படி கிடைக்கும் அமைதி.
அந்த குரு சொல்லி இருப்பார், ஒன்றும் தவறு இல்லை நீ சரியான வழியில் போகிறாய், மகிழ்ச்சியாக இரு,
இன்னும் நிறைய பேரை ஏமாற்று, நான் இருக்கிறேன் உனக்காக ஆண்டவனிடம் சிபாரிசு செய்ய என்று..
மனித தன்மையை உணருங்கள் உணருங்கள் என்று கோடிக்கணக்கில் காசு சம்பாதித்து விட்டு சொல்லி கொண்டு இருக்கும் இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு கோவில் திண்ணையில் ஒரு வேளை சோறு மட்டும் போட்டு இப்போ சொல்லுங்கள் உங்கள் பரமாத்மா விளக்கத்தை என்றால் அவர் வார்த்தையில் அப்பொழுது நீங்கள் இறைவனை உணருவீர்களா?
எத்துனை காலம் தான் இப்படி போகுமோ நம் நாட்டில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக