இந்த நவீன யுக ஞானிகள் என் பிரபலமாகவும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாகவும் ஆகிறார்கள் என்பதற்கு ஒரு விடை கிடைத்தது.
நம் மனதிற்கு எவை எல்லாம் தவறு என்று தெரிந்தும் அதை செய்து விட்டு வருத்தபடுகிறோமோ, இந்த நவீன குருக்கள் அவை எல்லாம் தவறு அல்ல, மனித இயல்புதான் நீங்கள் அதை செய்யலாம் என்று நமக்கு சமாதானம் கூறுகிறார்கள். நம் செய்வதை தவறு என்று சுட்டி காட்டும் நண்பனை விட நீ செய்டா, நான் இருக்கிறேன் என்று கூறும் நண்பனைத்தான் நாம் அதிகம் விரும்புவோம். இதை புரிந்து கொண்டு ஆசைப்படு, சந்தோசமாக இரு என்று ஏத்திவிட்டு பிழைக்கிறார்கள்.இவர்கள் சொல்வதை எல்லாம் சற்று கவனித்தால், நம் வரலாறுகளில் மனித வாழ்க்கைக்கு தேவை என்று கூற பட்டு இருப்பதை சற்று மாற்றம் செய்து, தனக்கே உரிய எளிய நடையில் அதை எளிதாக்கி எதோ இறைவன் இவர்கள் காதுகளில் சொல்லியதை போல நம்மிடம் ஒரு பிரம்மையை தங்களின் பேச்சு திறமை மூலம் உண்டாக்கி மக்களை மயக்குகிறார்கள். ஏன்டா நீதான் இறைவனின் தூதன் என்றால், அல்லது இறைவன்க்கு மிகவும் நெருக்கமானவன் என்றால் நடக்கும் அநியாயங்களை தடுத்து நிறுத்து, ஏழைகளுக்கு வாழ்வு அளி. ஊழல் அரசியல்வாதிகளை அம்பலபடுத்து. மழை பெய்ய வைத்து பஞ்சத்தை போக்கு. வேலை வாய்ப்பு ஏற்படுத்து. பசியை போக்கு. அதை விடுத்து ஆட்டம்,பாட்டு, யோக நிலை. திருட்டு பசங்க. இவனுங்களை ஒழித்தாலே நாடு உருப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக