தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் செய்த துரோகத்திற்கு படு கேவலமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்தாக வேண்டும்.
எனவே ஒரே ஒரு மாற்றான பிஜேபி தான் அடுத்த ஆட்சி அமைக்கும் கட்சி. ஆனால் தமிழகத்தில் BJP வெல்வதை ஒரு போதும் நாம் அங்கிகரிக்க முடியாது. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி கட்சிதான் காவேரி விசயத்தில் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. ஓட்டு கேட்கும் தமிழக பிஜேபி தலைவர்கள் காவேரி நீரை பெற்று தந்து விட்டு தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க கோரட்டும்.
உண்மை என்னவெனில், மத்தியில் தமிழக உரிமையை உரக்க பேச மாநில கட்சிகள் தான் தேர்தலில் வெல்ல வேண்டும். நமக்கு நம் உரிமை பேச உள்ள ஒரு சொல்லகூடிய அரசியல்வாதி என்றால் அது ஜெயலலிதா தான். கருணாநிதி, மதிய அரசிடம் கெஞ்சி கேட்பவர். அது போதாது. மிரட்டி பணிய வைக்க வேண்டும். தற்போது பிஜேபி உடன் கூட்டணி சேரும் வாய்ப்புள்ள கட்சிகள், தேமூதீக(அரசியல் அறிவு இல்லாத விஜயகாந்த்), பாமக(ஜாதி அரசியல் செய்யும் ராமதாஸ்), மதிமுக(நல்லவராக இருந்தாலும் இலங்கை பிரச்சினை பற்றியே பேசி அழிந்த வைகோ), திமுக(குடும்ப அரசியல்), இவர்கள் அனைவருக்கும் மாற்று ஜெயலலிதா தான். பிரதமர் கனவோ என்னவோ, தமிழகத்திற்காக மத்தியில் போராடும் அளவு தன்னை மாற்றி கொண்டிருக்கிறார். அவரது பழைய சரித்திரம் பற்றி இப்பொழுது வேண்டாம். தற்பொழுது உள்ள சூழலில் அவரே இருக்கும் ஒரே தேர்வு.
என்ன நாற்பது தொகுதிகளிலும் வென்றால், ஆணவத்தில் ஆடுவார். ஆடி தொலையட்டும். மீதி உள்ள கட்சிகளுக்கு அவர் பரவாயில்லை.
நாற்பதுக்கு நாற்பதும் ஆ தி மு க விற்கு வழங்கி, தேர்தலுக்கு பிறகு பிஜேபி க்கு ஆதரவு அளித்து மிரட்டி மிரட்டியே தமிழக நலன்களை பெறுவதே ஒரே வழி.
மோடி மந்திரம் இந்திய நலனுக்கு பலிக்கட்டும். மறவாதீர் நண்பர்களே, ஆனால், அணைத்து சக்திகளும் கொண்ட மோடி மஸ்தான் கையில் இருக்கும் மந்திரக்கோலாக தமிழக கட்சி ஒன்றை வைத்தால் தான், நம் மாநில நலன் செழிக்கும்.
நமது தேர்வு மாநிலத்தில் அ தி மு க , அதன் வழியாக மத்தியில் பிஜேபி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக