டிசம்பர் 25, மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டிய நாள் மட்டும் அல்ல. தேசத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டையாக இருக்கும் சாதி பேயின் கோர முகத்தை நினைவில் கொள்ள வேண்டிய நாளும் கூட.
1968, டிசம்பர் 25, ஒரு படி நெல்லுக்கு பதில், கூலியாக இரண்டு படி நெல் கேட்டதற்காக கீழ்வெண்மணி கிராமத்தில் விவசாய கூலிகள் 48 பேரை ஒரு குடிசையில் வைத்து உயிரோடு எரித்து கொன்றனர்.
கீழ்சாதி, கூலிக்கார அடிமைகள் என்றெல்லாம் வசைபாட படும் ஏழைகள், விழித்து கொண்டால் நமக்கு ஆபத்து என்று பண்ணையார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடிய வெறியாட்டம் அது.
சுதந்திரம் கேட்டதற்காக ஜாலியன்வாலாபாக்கில் வெள்ளையன், 379 பேரை சுட்டுகொன்றான். ஆனால் ஒரு படி அரிசிக்காக 48 உயிர்கள் கொல்லப்பட்டன. வெள்ளையன் எவ்வளவோ மேல், இந்த உள்ளூர் கொள்ளையர்களுக்கு.
எதோ 40 வருடம் முந்தைய கதையை பேசவில்லை. இப்பொழுது நடக்கும் மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, மார்பில்(marble stone-PRP marbles) கொள்ளை பற்றி போராட்டம் நடத்தி பாருங்கள். அப்பொழுது தெரியும் இந்த பெரு முதலாளிகள் முன்னாள் இந்நாள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் உங்களை என்னவெல்லாம் செய்வார்கள் என்று.
கீழ்வென்மணியில் நினைவு மண்டபம் அமைத்து இருக்கிறார்கள். படங்களை பாருங்கள். எந்த திராவிட கட்சியும் இது பற்றி மூச்சு விடாது. ஏனென்றால் ஆட்சியில் இருந்தது தென்னாட்டு பெர்னாட்ஷா, மேதை, அறிஞர் அண்ணா.
கொடுமை என்னவென்றால், யாருமே தண்டிக்க படவில்லை இந்த படு கொலைக்காக. மக்களுக்குள் கலவரம் என்று முடிக்க பட்டது வழக்கு.
இதையும் படித்து விட்டு நீங்கள் அடுத்த பதிவை பார்க்க போய் விடுவீர்கள் எந்த சலனமும் இல்லாமல். ஆனால் இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை மீட்காமல் இப்படியே போய் கொண்டிருந்தால், விளைவு விபரிதம் ஆகிவிடும். இந்த லட்சணத்தில் திரு.அப்துல்கலாம் போன்றவர்கள் எந்த தைரியத்தில் வல்லரசை பற்றி பேசுகிறார்கள் என்று தெரிய வில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் வல்லரசு ஒன்றுதான் இப்பொழுது கேடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக