திங்கள், 27 ஜனவரி, 2014

GREEN INDIA ASSOCIATION!

You can help poor children by helping their studies, higher educations like Diploma, ITI, Arts courses.
Planting trees in your area(Saplings at free of cost),
helping orphanages, old age homes, physically and mentally challenged people.
No mediators or Trusts.
We will make you contact the neediest directly and you can help them financially or by some other means.
Contact: Mr.Nagarajan/ President-Green India
(Forum of youngsters to save mother nature)
Periya Naicken Palayam, coimbatore, Tamilnadu, India.
+919894719113

அரசியல் நாகரிகம்


*"விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்' என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி.
*"துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்' என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி. அந்த புண்ணியவதியைத் தான், "கருவாட்டுக்காரி' என்று, கரித்துக் கொட்டினார், கருணாநிதி.தன் வாழ்வை, 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்ததாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், "திருமணம் வேண்டாம்' என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர். அதற்கு, "காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை' என, "நாகரிகத்தோடு' நல்கினார் கருணாநிதி.
*"காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது' என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி.
*"ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் போட்டுள்ளார் காமராஜர்' என, அரசியல், "பண்பாட்டோடு'ம் பறைசாற்றினார் கருணாநிதி.அதற்கு, "அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன்; அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்' என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார், காலாகாந்தி.இதில் வேடிக்கை என்னவென்றால், காமராஜர் கண் மூடிய போது, அவர் ஜிப்பாவில் வெறும், 100 ரூபாயும், தேனாம்பேட்டை ஸ்டேட் பாங்கில், இரு மாத எம்.பி., சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த வேதனையிலும், வேடிக்கை என்னவென்றால் பேங்க் பாஸ்புக்கும், செக் புக்கும், சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தன.இன்று, "கடந்த கால ஆட்சியின் போது, சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதில் தான், கருணாநிதி கவனம் செலுத்தினார்' என்று, கடந்த வாரம், சட்டசபையில் கருணாநிதி மீது கடுங்குற்றஞ்சாட்டினார், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர்.முத்தாய்ப்பாக, "அண்டங்காக்கா, எருமை தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி, மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி வெறுந் தலைவன்' என்று, ஒரிஜினல் தென்னாட்டு காந்தியை, 1 சதவீதம் கூட, அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி வசைபாடினார் கருணாநிதி.இந்த லட்சணத்தில், "இன்று அரசியல் பண்பாடும் இல்லை, நாகரிகமும் இல்லை' என, நாக்கிலே வெல்லமாக பேசும் இவரது பேச்சை நம்பிக் கொண்டிருக்க, தமிழக மக்கள் தயாராக இல்லை என்பதை, இவர், எப்போது உணரப் போகிறார்?

நடக்கட்டும் நாக்கு வியாபாரம்! By ப.திருமாவேலன். Vikatan 13 Nov 2013.

அமைச்சர்கள் அனைவரும் கரூர் செந்தில் பாலாஜியையும், எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் புதுக்கோட்டை விஜயபாஸ்கரையும் பின்பற்ற ஆரம்பித்தால்... தமிழ்நாடு என்னாகும்?

'அம்மா’ என்பது ஒரு பொதுச் சொல். ஆனால், பொதுவான சொல்லாகவா அது பயன்படுத்தப்படுகிறது? 'அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டினார்கள். அம்மா படத்தோடு, அந்தத் தண்ணீரில் இரட்டை இலை மலர்ந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், சிறிய பேருந்துகளிலும் இரட்டை இலைகள் பூத்துக் குலுங்குகின்றன. 'அரசுப் பணத்தில் கட்சி சின்னமா?’ என்றால், கறிவேப்பிலை, துளசி இலை, வாழை இலை... என்று தோட்டத்தில் பாத்தி கட்டுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்படி ஒரு பசுமைப் புரட்சியை இந்த அரை நூற்றாண்டு காலத்தில் எவரும் நடத்தியது இல்லை என்பதை உணர்ந்த ஜெயலலிதா, முகம் சிவக்க பெருமைப்பட்டுக் கொள்கிறார். செந்தில் பாலாஜி வாங்கிய நற்பெயரை நாம் எப்படி அடைவது என்று ஒவ்வோர் அமைச்சரும் அப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்!

சிலிர்த்துக் கிளம்பினார் புதுக்கோட்டை விஜயபாஸ்கர். தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஒலிக்கும் ஆபாசமான, அசிங்கமான, அருவருப்பான பேச்சுக்களை சட்டசபைக்குள் கொண்டுவந்தார். மயிலை மாங்கொல்லையில் என்ன பேச வேண்டும் என்பதற்கான வரையறையை கபாலீஸ்வரர் போடவில்லை. ஆனால், சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதெற்கெல்லாம் ஏராளமான வரையறைகள் உள்ளன. 'அமைச்சர் சொல்வது பொய்யான தகவல்’ என்றுகூடச் சொல்லக் கூடாது. 'அமைச்சர், பேரவைக்குத் தவறான தகவலைத் தருகிறார். இது உண்மைக்கு மாறானது’ என்றுதான் சொல்ல வேண்டும். அவையில் இல்லாதவர்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியும் பேச வேண்டியது வந்தால், அது விமர்சனமாக இருக்கலாமே தவிர, அவதூறாக, குற்றச்சாட்டாக இருக்கக் கூடாது. இப்படி ஏராளமான மாண்புகள் உள்ளன. எல்லா மாண்புகளையும் வரைமுறைகளையும் வரிசையாக மீறுவதுதான் அமைச்சர் பதவியை அடைவதற்கான வழி என்று தீர்மானித்துவிட்டால் என்ன ஆவது?
எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என்று வரையறுத்தவர்கள்... எப்படிப்பட்டவர்கள் சபைக்குள் வரவேண்டும், எப்படிப்பட்டவர்கள் சபைக்குள் வரக் கூடாது என்று சொல்லாததன் விளைவு இது!

கருணாநிதியைத் 'தள்ளு வண்டி’ என்றும், விஜயகாந்தை 'தண்ணியிலேயே இருப்பவர்’ என்றும் வளர்மதியோ, செல்லூர் ராஜுவோ சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு ஆச்சர்யம் உண்டாகி இருக்காது. ஆனால், விஜயபாஸ்கர், மருத்துவம் படித்தவர். முதுமையின் இயலாமையை கருணையோடு கவனிக்கச் சொல்கிறது மருத்துவம். ஆனால், இந்தப் பாழாய்ப்போன அரசியலும் பதவியும் அதனை சட்டசபையில் வைத்து அறுவைசிகிச்சை செய்யச் சொல்கிறது.

'நீ முகத்தைக் காட்டு தம்பி... அது போதும்’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து பேரறிஞர் அண்ணா சொன்னார். அந்த எம்.ஜி.ஆரின் லட்சக் கணக்கான ரசிகர்களை, மெள்ள அரசியல் மயப் படுத்தி, இரட்டை இலை மயக்கத்தை ஏற்படுத்திய முசிறிப்புத்தனின் வாழ்க்கை, தள்ளுவண்டியில்தான் கழிந்தது. நடக்க முடியாத முசிறிப்புத்தன்தான் பல்லாயிரக் கணக்கான எம்.ஜி.ஆர். மன்றங்களை உயிரோட்டம் குறையாமல் வைத்திருந்தார் என்பது விஜயபாஸ்கர்களுக்குத் தெரியாது. நல்லவேளை, தெரிந்தவர்கள் யாரும் சபைக்குள்ளும் இல்லை; அ.தி.மு.க-விலும் இல்லை.

கருணாநிதி, திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று பதிவுசெய்தவர் வளர்மதி. விஜயபாஸ்கர், 'தள்ளுவண்டி’ என்று கிண்டல் செய்கிறார். கருணாநிதி, இப்போதும் இந்த அவையின் உறுப்பினர். இன்று மட்டுமா... 1957-ல் இருந்து உறுப்பினர். கருணாநிதி, ஆயிரம் விமர்சனங்களுக்கு உரியவரே தவிர, அவரைக் கொச்சைப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. 'கருணாநிதி, கருணாநிதி’ என்று இதே சபையில் முன்பு ஒருமுறை அ.தி.மு.க. உறுப்பினர் பேசியபோது, 'கலைஞர் என்று சொல்லுங்கள். அவர் எனக்குத் தலைவராக இருந்தவர்’ என்று தடுத்தவர் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தப் பொன்மனத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. புண்படுத்தாத மனம் வேண்டாமா? அதுவும் சட்டசபையில்? விஜயகாந்த், 'தண்ணியிலேயே இருப்பவர்’ என்றால், அமைச்சர்கள் அனைவருமே ஆல்கஹால் பார்க்காத உடலும் குடலும் கொண்டவர்களா? பள்ளி, கல்லூரிகளை தனியார் நடத்தட்டும், டாஸ்மாக்கை அரசாங்கம் நடத்தும் என்று சொல்லும் மாநிலத்தில் - டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகிவிட்டதை அரசாங்கச் சாதனையாகச் சொல்லும் மாநிலத்தில் - கடந்த ஆண்டு தீபாவளியைவிட இந்த ஆண்டு தீபாவளிக்குக் கூடுதல் விற்பனை இலக்கு அடைந்ததைப் பூரிக்கும் மாநிலத்தில் - வாழ்வதால் உண்டாகும் அவமானத்தைவிட, விஜயகாந்தின் தனிப்பட்ட பழக்கம் எதுவும் தமிழர்களைப் பாதிக்காது. சுகாதாரத் துறைக்கு அமைச்சராக வந்திருக்கும் விஜயபாஸ்கர், இனிமேலேனும் நம் தமிழகத்தில் பெருகியிருக்கும் குடிநோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த காரியம் ஆற்றட்டும்.

விஜயகாந்த் எழுந்ததும் கிண்டல் செய்து சிரிப்பது, அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் அவரைக் கொச்சைப்படுத்துவது, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது என்பதையே பழக்கமாக வைத்திருப்பதால்தான், அவர் பேரவைக்கு வருவதே இல்லை. சாதாரண ஓர் உறுப்பினர் என்றால் பரவாயில்லை. எதிர்க் கட்சித் தலைவர். அது கட்சிப் பதவி அல்ல. அரசுப் பதவி. அந்தப் பதவிக்கான முக்கியத்துவம்கூட தரப்படாதது தவறு. அவருக்கு அந்தத் தகுதி இல்லை என்று நினைத்தால், 40 தொகுதிகளைத் தூக்கிக் கொடுக்கும்போது, அந்தத் தகுதி இருந்ததாக நினைத்தார்களா? விஜயகாந்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்றால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அத்தனை பேர் வெற்றியிலும் தே.மு.தி.க-வின் வாக்குகளும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே! முரசுக்காரர்களின் ஓட்டில் மட்டும் எம்.எல்.ஏ-க்களாக அமைச்சர்களாக வலம் வரலாமா? கூட்டணி வைத்துப் போட்டியிடும்போது இப்படி கணக்குப் பார்ப்பது அபத்தம். ஆனால், திட்டமிட்டு அவமானப்படுத்தும்போது இந்தக் கேள்விகள் தவிர்க்க முடியாதவை.

எ.வ.வேலு, கண்டக்டராக இருந்தாரா கார்பென்டராக இருந்தாரா என்பதா விவகாரம்? 'இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற எ.வ.வேலு, இப்போது அதைப் பற்றி பேச அருகதை இல்லை’ என்கிறார் அமைச்சர் கே.பி.முனுசாமி. இந்த முனுசாமி மட்டும் சுயம்புவா? தி.மு.க. மாணவர் அணியில் இருந்தவர்தானே கே.பி. முனுசாமி. அவருக்கு மட்டும் தி.மு.க-வைக் குற்றம் சொல்லிப் பேச அருகதை வந்துவிடுமா? தற்போதைய தமிழக அரசியல் சூழலில் எவருக்குத்தான் அந்த அருகதைகள் உள்ளன?

ஜெயலலிதா சேவலாகவும், வி.என்.ஜானகி புறாவாகவும் 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பறந்து வந்தபோது புறாவுக்கு தேனியில் நெல் போட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்றைய முதல் விசுவாசியாக உட்கார்ந்திருக்க முடியுமா? பி.எச்.பாண்டியன் அப்போது பேசிய பேச்சு என்ன... இப்போது செய்யும் செயல் என்ன? ஒரு பெண் என்பதற்காகவே, ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தி, தமிழக மேடைகளில் ஆபாசக் குப்பைகளை அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே ஒரு கூட்டம் அரங்கேற்றியபோது, அவருக்கு ஆதரவாக நின்றதாலேயே, 'சேலை துவைக்கிற பசங்க’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட எஸ்.திருநாவுக்கரசும், கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனும், கருப்பசாமிப் பாண்டியனும்... இன்று ஜெயலலிதாவின் எதிரிகள். அன்று அவரைக் கொச்சைப்படுத்தியவர்கள் இன்று தாசானுதாசர்கள். இவர்கள் பேசுவதை ஜெயலலிதா விரும்பலாம். அதற்கு இந்தச் சட்டசபைதானா கிடைத்தது?

இந்தச் சட்டசபைக்குள் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார் என்பது உண்மைதான். இதை வைத்து 'அவர்கள் மட்டும் யோக்கியமா?’ என்று கேட்கலாம். நாய் கடித்தால், எந்த மனிதனும் திருப்பிக் கடிக்க மாட்டான் என்பதே பதில். கருணாநிதியையும் விஜயகாந்தையும் சபைக்குள் அனுமதித்து, அவர்களது குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வது மட்டுமே ஜெயலலிதா விட்டுச் செல்லும் வழித்தடமாக அமையும். கூஜா தூக்கிகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள். சேடப்பட்டி முத்தையாவைவிட வேறு ஓர் உதாரணம் தேவை இல்லை. ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாகக் காட்டிக்கொள்வதன் மூலமாக தங்களை வளப்படுத்திக்கொண்டு ராஜாங்கத்தை திவால் ஆக்கும் இவர்கள், ராஜா தோல்வியைத் தழுவும்போது, 'எனக்கு அப்பவே தெரியும்’ என்று கிளை தாவிப் போய்விடும், நாக்கு வியாபாரிகள்.

இவர்கள் மேடைகளில் பேசுவதைப் பற்றி எவருக்கும் கவலை இல்லை. ஆனால், சட்டமன்றத்துக்கு அதுவும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு என்று மலையளவு மாண்பு இருக்கிறது. சட்டமன்ற நடைமுறைப் பேரேடுகளைப் புரட்டிப் பார்த்தால், ஆளும் கட்சிக்கு ஆலோசனை சொல்லி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசியதுதான் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் இருக்கும். 'எதிர்க்க எவரும் இல்லை, எதுவும் பேசலாம்’ என யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதால்தான், கண்ணுக்குத் தெரியாத பத்து பார்வையாளர்கள், படங்களாக உள்ளே உட்கார வைக்கப்பட்டுள்ளார்கள்.

திருவள்ளுவரை மதிக்க வேண்டாம். எம்.ஜி.ஆருக்காவது மரியாதை கொடுங்கள்!

காமராஜர் அவர்களை பற்றி திரு.நெல்லை கண்ணன்

’கத்தியின்றி ரத்தமின்றி’- சிறுகதை by எழுத்தாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் தெளிவத்தை ஜோசப்.

அந்த மலைகள் மிகவும் பயங்கரமாக எழுந்து நின்றன. மக்களின் உரிமை உடைமை இத்தியாதிகளை சங்காரம் செய்த தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரக் கொடுமைகளை விடக் கோரமானதாகத் தலை விரித்துக் கொண்டு நிற்கின்றன.

உள்ளே எது நடந்தாலும் அதை வெளியுலகுக்குக் காட்டுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் அவை அந்தத் தேயிலைத் தோட்டத்தை அரண் செய்து நிற்கின்றன.

அந்த மலைகளின் ராட்சத உடலில் பட்டி பிடித்தாற்போல் மலைகளைச் சுற்றி வரும் செம்மண் பாதையில் கைப்பிரம்பைச் சுழற்றியபடி நடந்து கொண்டிருக்கிறார் தோட்டத்து டிஸ்பென்ஸர். தோட்ட மக்கள் பாழைப்படி டாக்டரைய்யா!

பையில் ஸ்டெதஸ்கோப்பும் மனதில் துவேஷமும் வெள்ளைக்கார நடை நடந்து கொண்டிருந்த சிங்கள டாக்டரய்யாவைக் கண்டதும் லயத்து நாய்களுக்கு ஒரே குஷி. கூட்டமாகக் குரைத்தபடி ஓடி வந்தன.

கூலிக்காரன் நாய்தானே என்னை என்ன செய்துவிடும் என்ற அசட்டையுடன் நடந்து கொண்டிருந்த அய்யா டக்கென்று நின்றார். பாய்ந்து வந்த நாய்களும் பிரேக் போட்டு நின்றன.

பாதையடியில் நாய் குரைத்த சத்தம் கேட்டு காந்தி படத்துக்கு மாலை போட்டுக் கொணடிருந்தவன் றோட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்தான். டாக்டரையா லயத்துப் படியில் இறங்கிக் கொண்டிருந்தார்.

“செலாங்கய்யா… லயம் பார்க்கவா?”

ஆமாம், தலைவர் என்ன இன்னைக்கு வேலை இல்லியா…?” என்று கேட்டபடி இறங்கி வந்த ஐயா

“யாரூட்டு படம் இது… மாலை எல்லாம் போடுறே…” என்று கேட்டார்.

முன்பொரு தடவை அவரே அவனிடம் கூறியிருக்கிறார் ‘இந்தியாக்கார ஆளுங்களுக்குக் கொஞ்சம் சூட தேசப்பற்று கிடையாது…. இந்த லயம் முழுக்கப் பாரு. ஒவ்வொரு வீட்டிலேயும் காந்தி படம் இருக்கும். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் படம் இருக்கும். எவன் வீட்லேயாவது நம்ம தலைவரூட்டு படம் ஒன்று இருக்கா. ஒரு சேநானாயக்கா, பண்டாரநாயக்கா கெடயாது… ஆனா சொல்லிக்கிறது மட்டும் இது எங்கள் நாடு. இதுல எங்களுக்கும் உரிமை வேண்டும் அப்படி இப்படின்னு’ என்று.

‘அய்யாவுக்கு ஏன் இந்த வேண்டியில்லாத வௌகாரமெல்லாம். லயம் பாக்க வந்தா லயத்தைப் பாத்துட்டுப் போக வேண்டியதுதானே’ என்று நினைத்துக் கொண்டவன் அவரிடம் கேட்டு வைத்தான்: “யாரார் வீட்டுல என்னென்ன படம் மாட்டியிருக்குன்னும் ஐயா கணக் கெடுக்குறீங்க போல….” என்று.

“அதில்ல தலைவரே, இந்த ஆளுங்களை எல்லாம் புடிச்சு வெறட்டிப்புடனும். இது உங்க நாடு இல்லே… இந்த நாட்டின் தலைவர்கள்லாம் உங்க தலைவர்கள் இல்லே… உன் காந்தி, உன் நேரு இருக்கிற நாட்டுக்கே போடான்னு இவங்களை எல்லாம் புடிச்சு வெறட்டிப்புடனும்…”

“இதையே தானே உங்கள் தலைவர்களும் சொன்னாங்க… சொல்றாங்க… சொல்லப்போறாங்க… ‘நீங்கல்லாம் எங்க நாட்டு மக்கள் இல்ல. நீ எல்லாம் ஓடிப்போ… இந்த நாட்டுல உங்களுக்கு எதுவும் கிடையாதுன்னும், கடைசித் தமிழனையும் இந்த நாட்டை விட்டு கப்பலேற்றிய பிறகுதான் எனக்கு சாவே வரும்’ என்றும் சங்கல்பம் செய்து கொண்டவர்களுடைய படங்களையெல்லாம் கண்ணாடி போட்டு மாட்டிக்கொள்ள இவர்கள் என்ன பேடிகளா… எங்களை அடிப்பதற்கு ஆள் கூட்டி வரவில்லை காந்தி. ஆனா அவர் எங்களுக்காக அடிபட்டிருக்கின்றார். அதனால்தான் அவரை ஏற்றுக் கொள்கின்றோம். காந்தி படத்துக்குப் பிறேம் போட்டு மாட்டிக் கொள் என்று யாரும் இந்த மக்களுக்குக் கட்டளை இடவில்லையே…”

இப்படிச் சுடச்சுட முகத்திலடித்தாற்போல் முன்பொரு தடவை டாக்டரய்யாவுக்கு பதில் கொடுத்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

காந்தியின் படத்தைப் பார்த்து இது யாருடைய படம் என்று கேட்பதன் மூலம் தனக்கும் எனது தலைவர்களுக்கும் பெருமைத் தேடிக் கொள்வதாக எண்ணிக்கொள்ளும் அய்யாவின் அறியாமை அவனுக்கு சிரிப்பூட்டியது.

“இது யாருன்னு அய்யாவுக்குத் தெரியலையா… அடப்பாவமே! ‘மனிதர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதால் மற்ற நாட்டை வெறுக்கிறார்கள் என்பதல்ல பொருள்’ என்று கூறிய மகாத்மா இவர்தான்.

மற்றவர்களுடைய தலைவர்களை, மற்ற நாட்டவர்களை வெறுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் நாட்டை, உங்கள் தலைவர்களை, உங்கள் நாட்டவர்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளும் உங்கள் போன்றவர்களுக்கு உலகத்துக்கே ஒப்பற்றவரான ஒரு மனிதரைத் தெரிய முடியாதுதான்….”

“தெரியாமல் என்ன நல்லாத் தெரியும்… ஏன் மாலை போடுறேன்னு தான் கேட்டேன்…” என்ற படி பேச்சை முடித்துக்கொண்டு தலைவர் வீட்டுக் கோடியில் நுழைந்து அடுத்த லயத்துக்குப் போய்விட்டார் அய்யா.

மேசையில், காற்றில் பட படத்த நோட்டீசை எடுத்து மறுபடியும் பார்த்துக் கொண்டார் தலைவர்.

அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி கொண்டாடும் காந்தி விழா பற்றிய நோட்டீஸ் அது.

பேச்சாளர்கள் வரிசையில் அவருடைய பெயரும் தடித்த எழுத்தில் இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிலும் நேபாளம் போன்ற நாடுகளிலும் சிறுபான்மை இந்திய மக்களுக்காக அஹிம்சையுடன் அவர் செய்த அறப்போர் பற்றிப் பெச வேண்டும் என்பது அவரடைய அவா.

முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவில் அவர் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி இன்றெல்லாம் பேசலாம்.

காந்தி எழுதிய ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ என்னும் நூல் மேசையில் கிடக்கிறது. அதை எடுத்து வாசிக்கும் போதே அவருடைய நெஞ்சு உருகியது.

கறுப்பர்கள் நடக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட வீதியொன்றில் தெரியாத்தனமாக காந்தி நடந்தபோது அங்கு காவல் நின்ற போலீஸ்காரன் நேராக அவரிடம் வந்த ஏன் வந்தாய் என்றும் கேட்காமல், ஒரு வார்த்தையும் பேசாமல், ‘போய்விடு’ என்று கூறாமல் தன்னுடைய பலம் கொண்ட மட்டும் பூட்ஸ் காலால் அவர் நெஞ்சில் எட்டி உதைத்தான்.

இந்தத் திடீர் தாக்குதலால் அவர் நிலைகுலைநை;து போனார். அவரடைய நோஞ்சான் உடம்புக்கு போலீஸ்காரனின் முரட்டு உதையைத் தாங்கிக்கொள்ளும் சக்தி கிடையாது. எpகிறிப்போய் விழுந்தார். பாதையின் எதிர்ப்பக்கம் இருந்த வெள்ளைக் கல்லில் அவருடைய முகம் மோதி நசுங்கியது.

தன்னைச் சுதாரித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க அவருக்குச் சில நிமிடங்கள் பிடித்தன.

வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துவிட்டுக் கொண்டார். நெற்றிப் பொட்டு வீங்கிப் புடைத்திருந்தது. எங்கே வலிக்கிறது என்று தெரியாமல் உடல் மழுவதும் நோவு எடுத்தது.

காந்தி உதைபட்ட செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. அவரை உதைத்தவனைக் கோர்ட்க்கு இழுத்துப் பழி வாங்குமாறு அனைவரும் அவரை வேண்டினர். ஆனால் காந்தி மறுத்துவிட்டார்.

“அவனுக்கென்ன தெரியும் பாவம். சாவி கொடுத்துவிட்டவன் யாரோ. இவன் ஆடுகிறான். அவன் என்னை உதைத்தான் என்பதல்ல அவமானம். என் சமூகத்தையே உதைத்திருக்கிறான்.

தலைவர் கண்களை மூடிக் கொண்டார். கோடாக நிற்கும் இமை விளிம்பில் மணியாக உருள்வது கண்ணீரல்ல. கரைந்த அவரது உள்ளம்.

ஆஹா! இவரல்லவா மகாத்மா.

கத்தியின்றி, இரத்தமின்றி காந்தி நடத்திய அகிம்சைப் போர்களைப் பற்றித் தன்னால் எவ்வளவு அழகாகப் பேச முடியும் என்பதைத் தீர்மானித்துக் கொண்ட பிறகே ஜில்லாவிலிருந்து வந்த கடிதத்துக்கு ஒப்புதல் பதில் போட்டார்.

தான் ஒன்றித்துப்போன ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குக் கூறும் போது உணர்ச்சிப் பெருக்குடன் சொற்பெருக்காற்றலாம் என்ற நம்பிக்கையும் அவருக்கிருந்தது.

இன்று நேற்றா மேடையேறுகின்றார். சொற்பொழிவுக்கு ஒத்துக் கொண்டால் தலைப்பையும் தரும்படி கேட்டிருந்தார்கள் விழாக் குழுவினர். அவர் எழுதி அனுப்பிய தலைப்பைத்தான் விழா நோட்டீசில் அச்சிட்டிருக்கிறார்கள். தலைப்பை நினைக்கையில் அவருக்கு இப்போதும் புல்லரிக்கின்றது.

“கத்தியின்றி ரத்தமின்றி”

அன்று ஒரே அடை மழை.

வானம் பொத்துக் கொண்டு விட்டதோ என்று ஐயுறும் அளவுக்கு அடித்துக் கொண்டு ஊற்றுகிறது. இந்தப் பூமியே இப்படித்தான். எப்போது பெய்யும். எப்போது காயும் என்று யாராலும் நிர்ணயித்துக் கூற முடியாது.

நோவா காலத்தைய நாற்பது நாள் மழையும் அன்றே பெய்து தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிகாலையிலே காற்றும் மழையுமாகக் கொட்டத் தொடங்கிவிட்டது.

மலையில் நிற்கும் மரங்கள் ஆடி அழன்று சோபை கெட்டுப்போய் நிற்கின்றன.

கூடையும் தலையுமாக கொழுந்தெடுக்க மலையேறிவிட்டவர்கள் குன்னிப்போய் மரத்தடிக்கு மரத்தடி நிற்கின்றனர் நனைந்த கோழிகள் போல் வெளிறிப்போய்.

தடதடவென்று ஓசையுடன் எங்கோ ஒரு சவுக்குக் கிளை முறிந்து விழுகிறது.

“ஏய் புள்ளங்களா ஒருத்தரும் மரத்தடியில் நிக்காதீங்க. வாதேதும் புண்டு விழுந்தாலும் விழும்…. ஆபத்து” என்று கத்தியவாறு நின்று கொண்டிருந்த மரத்தடியிலிருந்து பெயர்ந்தோடினான் கங்காணி.

கையை நீட்டிக் கொழுந்தெடுக்க முடியாவிட்டாலும் பெயருக்குக்கூட மலையில் நிற்க முடியவில்லை.

ஊன்றி நிற்கும் கால்களும், ஊஞ்சலாடித் தொங்கும் கைகளும் உணர்விழந்து சுரணை கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. வேறோர் மலையில் வேலை செய்யப் போய் உரப்பட்டியில் ஒண்டி நின்ற தோட்டத்துத் தலைவர் ஆபீசை நோக்கி ஓடினார்.

கம்பளிச் சட்டையும் தானுமாக கதகதவென்று உட்கார்ந்திருந்த துரை ள்ளிழுத்த புகையை கூரையை நோக்கி ஊரிவிட்டு “ஏஸ் தலைவர் என்னா இந்த நேரம்?” என்றார்.

“வேலைவிட்டுறனுங்க மழை அடிக்கிற அடி தாங்க ஏழாதுங்க. மரம் ஏதும் ஒடிஞ்சு விழுந்தா ஆபத்து….”

“சரி விட்டுறுவோம்… ஆனா இன்றைய சம்பளம்…..”

“முழுச் சம்பளம் குடுகணுங்க. தோட்டத்துக்கே உழசை;ச ஆளுங்கதானே. மழை இப்படி பேயோட்டி முழு நேரம் வேலை செஞ்சுருக்குங்க தானே…”

“சரி இன்னும் ஒஐ அரை மணி நேரம் பார். மழை விடாட்டி எடுத்த கொழுந்தை நிறுத்துட்டுப் போகச் சொல்லு…..”

“நல்லங்க” என்று ஆபீஸ் படி இறங்கிய தலைவரை துரையின் குரல் நிறுத்தியது.

“கணக்கப்பிள்ளையை ஆபீசுக்கு வரச் சொன்னேன்னு சொல்ரு உடனே….”

“இப்போது மணி ஒன்பதுதானாகிறது. இப்போதே வேலை நிற்பாட்டி முழுப்பேர் கேட்கிறார்கள். நீ எப்படியாவது பனிரெண்டறுதி நீ கொழுந்தெடுக்கப் பார். அப்போது தான் பாதிக்குப் பாதியாவது தேறும். ஒரே நேரம் நிறுத்தாலும் பரவாயில்லை… சரி போ”

தொப்பையாக நனைந்தபடி மழைக்கோட்டும் தானுமாக ஆபீசுக்கோடி வந்த கணக்கப்பிள்ளையிடம் துரை இப்படிக் கூறினார்.

பெருமாள் மாடாய் “வெறிவெல் சார்” என்று தலையாட்டிவிட்டு மழைக்கோட்டைச் சுமந்தபடி படியிறங்கினார் கணக்கப்பிள்ளை.

முட்டையுடன் ஊரும் கட்டெறும்புக் கூட்டமாய் கூடையுடன் சாரி சாரியாக ஆட்கள் ஊர்ந்து கொண்டிருந்தனர் – பெரட்டுக் களத்தை நோக்கி கொழுந்து நிறுக்க.

கைக்கடிகாரம் நனைவதையும் பொருட்படுத்தாமல் மழைக்கோட்டுக்கு வெளியே கையை நீட்டி மணியைப் பார்க்கின்றார் ஆபீசிலிருந்து படியிறங்கிக் கொண்டிருந்த கணக்கப்பிள்ளை.

மறுபடியும் உற்றுப் பார்த்தார். மணி ஒன்பது ஐந்து. இந்த மழையில் ஆட்களை மலையில் நிறுத்தி வைப்பதும் ஒன்றுதான். லயத்துக்கனுப்புவதும் ஒன்றுதான். மலையில் நின்றால் மட்டும் வேலை செய்யவா போகிறாரர்கள். வேலை செய்யத்தான் முடியுமா?

ஆனால் பன்னிரண்டு மணிக்கு முன்பாக இவர்களை வீட்டுக்கனுப்பி விட்டால் துரையிடம் தப்பிக்க முடியுமா அவரால்.

சாரைப்பாம்பு போல விர்ரென்று இறங்கினார் குறுக்குப் பாதையில்.

சர்ரென்று ஊற்றிய மழை சப்பாத்துத் தொப்பி மழைக்கோட்டு ஆகியவற்றில் டப்டப்பென்று விழுந்து தெறித்தது.

நீரடித்த காடாய்க் கிடக்கிறது பெரட்டுக் களம்.

ஆட்கள் கூடையும் படங்குமாய் கூனிக் குறுகிக் கொண்டு நிற்கின்றனர்.

“ஏ கங்காணி! என் இதுகளை எல்லாம் இழுத்துக்கிட்டு வந்தே…. மணியைப் பார்…” கையை நீட்டிக் காட்டுகிறார். “ஒன்பதே கால்தான். இப்பவே நெறுக்க ஏலாது. ஒன்பதே காலுக்கு நிறுத்த இந்தாளுகளை வீட்டுக்கனுப்பிட்டா ஒங்க பாட்டன் துரை சும்மாருப்பானா… இப்பவே நிறுக்கேலாது. போய் வேலை செய்யச் சொல்லு… ம்ம்… போ… எல்லாம்…” கணக்கர் கத்தினார்.

கணக்கப்பிள்ளை ஐயாவுக்குப் பயந்த ஓரிருவர் கூடையைத் தூக்கித் தலையில் மாட்டினர்.

“ஒருத்தரும் போக வேணாம். போடு கூடையைக் கீழே….” தலைவர் நின்று கொண்டிருந்தார்.

கணக்கப்பிள்ளை தலைவரை முறைத்துப் பார்த்தார்.

“அய்யா சும்மா மொறைக்காதீங்க தொரை கிட்டக் கேட்டுட்டுத்தான் ஆளுகளை மலையில் இருந்து எறங்கச் சொன்னேன் நான்….”

“வேலை செய்யுற ஆளுகளை மலையில் இருந்து எறங்கச் சொல்ல நீ யார்….? தொரையே சொல்லியிருந்தாலும் கூட நீ வந்து என்கிட்டத்தான் சொல்லியிருக்கணும்”

“இங்க பாருங்கையா” ஒரு பெண் காலைக் காட்டுகிறாள். நாட்டியக்காரி கலங்கை கட்டியது போல் விரல் பருமனில் ரத்தம் குடித்த அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. இதைக் கவனித்ததாகக் கூடக் கணக்கப்பிள்ளை காட்டிக் கொள்ளவில்லை.

“தொரைதான் போகச் சொல்லிட்டாரே உங்களுக்கென்னய்யா வந்தது…. நீங்க கையை ஒடிச்சுக் கிட்டு சம்பளம் குடுக்கிறாப்புல…”

“கையை ஒடிகக்pற காலை ஒடிக்கிற கதை எல்லாம் நம்மக்கிட்ட வாணாம்… நான் நெறுக்கப் போறதில்லே… நீ எல்லாம் மலைக்குப் போ…”

“நிறுக்காட்டிப் போ… கொஞ்சம் கூட ஈவு இரக்கம் கெடையாதவன்” என்றபடி ஒருவன் கூடையைக் காலால் எட்டி உதைத்தான்.

கொழுந்து விசிறியடித்தது.

“ஏன்டா பார்த்திகிட்டு நிக்கிறீங்க. கொட்டீட்டு வா…” நாலைந்து இளவட்டப் பையன்கள் கூடையை எத்திவிட்டனர்.

“நிறுக்கப் போறியா இல்லையா…” இது தலைவர்.

“நீ ஆயிரம் காரணம் சொல்லு. நான் நிறுக்கப் போறதில்லே…” இது கணக்கப்பிள்ளை.

“ஆளுங்க எல்லாம் குளிர் புடிச்சுத் செத்தா…?”

“மண்ணும் ஈரமாத்தான் இருக்கு… குழி வெட்ட லேசாத்தான் இருக்கும்”

ஆத்திரம் கொண்ட தலைவரின் கவ்வாத்துக் கத்தி கணக்கப்பிள்ளையின் தோளில் பாய்ந்தது.

கொய்யா மரத்தில் கொத்தியது போல் கணக்கப்பிள்ளையின் தோள் எலும்பில் கொத்தி நின்ற கத்தியுடன் பிரக்ஞையற்று கீழே விழுந்தார் கணக்கப்பிள்ளை.

ரத்தத்தில் மூழ்கிய கத்தி தனது சிவந்துவிட்ட கண்களால் தலைவரை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது.
 

Thanks to Jeyamohan and காந்திஜியின் கடைசி 200 நாட்கள். வி.ராமமூர்த்தி.

ஆகஸ்ட் 13 அன்று காந்தி கல்கத்தாவில் இஸ்லாமிய தலைவர் சுரவர்த்தியுடன் இஸ்லாமியக்குடியிருப்பு ஒன்றில் தங்கினார். அப்பட்டமான வகுப்புவாதியும் சுயநல அரசியல்வாதியுமான ஷஹீத் சுரவர்த்தியின் தலைமையில் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு எதிராக கொலைவெறியாட்டம் ஆடியிருந்தார்கள். ஆனால் பின்னர் கிராமப்புறத்தில் இருந்து இந்து இளைஞர்கள் திரண்டு திருப்பியடிக்க ஆரம்பித்தபோது அவர்கள் நடுவே தன் மக்களுடன் சுரவர்த்தி மாட்டிக்கொண்டார். தங்களை காக்கும்படி காந்தியிடம் அவர் சரண்புகுந்தார். முஸ்லீம்களை இந்து வெறியர்களிடம் இருந்து காக்க காந்தி சுரவர்த்தியுடன் அங்கே வந்தார், அவரும் சுரவர்த்தியும் சேர்ந்து ஹைதாரி மாளிகை என்று சொல்லபப்ட்ட பாழைந்த நாற்றமடிக்கும் கட்டிடத்தில் தங்குவதாக ஏற்பாடாகியது.

சுரவர்த்தியை காரில் இருந்து இழுத்துப்போட்டு கொல்லவந்த இந்துவெறிக்கும்பலிடம் காந்தி கைகூப்பி மன்றாடி அவருடைய உயிரை காப்பாற்றினார். அவர்களிடம் தன் பேச்சைக் கேட்குமாறு அவர் மன்றாடினார். மெலிந்த தோள்களுடன் நின்ற தந்தைவடிவம் அவர்களை அமைதியடையச்செய்தது. ஆனால் அவர்கள் அவரை வசைபாடினார்கள். இந்துக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படும்போது அவர் எங்கே சென்றிருந்தார் என்று கேட்டார்கள். அப்போதுகூட இந்துக்கள் கொல்லப்படுகிறார்களே அதை தடுக்க அவரால் ஆகுமா என்றார்கள். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அவர்களிடம் அகிம்சையை வலியுறுத்தினார். பரஸ்பரப்புரிதலை நோக்கி பொறுமையுடன் முன்னகர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

‘நான் என்னை உங்கள் பாதுகாப்பில் விடப்போகிறேன்.அவ்வளவுதான். நீங்கள் எனக்கு எதிராக திரும்பலாம். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நான் என் வாழ்க்கைப்பயணத்தின் இறுதிக்கட்டத்தை அனேகமாக எட்டிவிட்டேன். நான் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டியதில்லை. ஆனால் பைத்தியக்காரத்தனத்துக்கு நீங்கள் இடம்கொடுக்கப்போகிறீர்கள் என்றால் நான் அதை உயிரோடு பார்க்கும் சாட்சியாக இங்கே இருக்கப்போவதில்லை” அவர்கள் அமைதியடையவில்லை. அவர்கள் ஆழமாக புண்பட்டிருந்தார்கள். கொதித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் அவரை மீறவும் அவர்களால் முடியவில்லை.

மறுநாள் இந்தியா சுதந்திரமடைவதற்கு முந்தைய காலையில் மீண்டும் அந்த வெறிகொண்ட இளைஞர்கள் அவரிடம் வந்தார்கள். அவரை வசைபாடினார்கள். அவரை சாபமிட்டு அழுதார்கள். ஆனால் அவர் மீண்டும் அவர்களிடம் பொறுமையையும் அகிம்சையையும் சகமனிதர்கள் மீதான நம்பிக்கையையும் வலியுறுத்தினார். நவீன யுகத்திலும் அதிசயங்கள் நிகழக்கூடும் என்பது மெல்ல மெல்ல நிரூபணமாகியது. அந்த இளைஞர்கள் அவர் முன் மெல்ல அமைதியடைந்தனர். அவரது சொற்களுக்குப் பனிந்து வன்முறையைக் கைவிட்டனர். கல்கத்தா பரிபுரணமாக அமைதிக்குத் திரும்பியது.

அன்று மாலை நடந்த பிரார்த்தனைக்கூட்டத்தில் காந்தி பேசும்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு உண்டு என்றார். சுதந்திரம் கிடைக்கும் ஆகஸ்ட் 15 நாள்முழுக்க உண்ணாநோன்பிருந்து பிரார்த்தனை செய்து இந்தியாவும் பாகிஸ்தானும் நலம்பெறுவதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றார். அந்த கூட்டத்தில் மக்கள்நடுவே தோன்றிய சுரவர்த்தி அவர் தலைமைதாங்கி இந்துக்கள் மீது நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாக அறிவித்து தலைகுனிந்து இந்துக்களிடம் மன்னிப்பு கோரினார்.

ஆகஸ்ட் 15 அன்று தேசமே மகாத்மா காந்திக்கு ஜே என்று கூவிக்கொண்டிருந்தது. டெல்லியில் காந்தியின் படத்தை வைத்து நேருவும் படேலும் புதிய இந்திய அரசை அமைத்தனர். ஆனால் காந்தி கல்கத்தாவில் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெலியகட்டா பகுதியில் இருந்தார். அன்று அவர் உணவுண்ணவில்லை. அவரது அமைதிச்செய்தி அங்கே பரவி தெருக்கள் தோறும் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினார்கள். மாலை ஆக ஆக மகிழ்ச்சியும் களியாட்டம் கலந்த மனநிலை உருவாக ஆரம்பித்தது.

அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்திருந்த காந்தி அன்று தூஙகச்செல்ல பதினொரு மணி ஆகிவிட்டிருந்தது. மூன்றுமணிநேரம் தூங்கிவிட்டு எழுந்த அவர் கைராட்டையில் நூல்நூற்க ஆரம்பித்தார். அதன் பின் காலைநடை சென்றார். அந்த பாழடைந்த மாளிகை காந்தியாலும் ஊழியர்களாலும் முழுமையாக தூய்மைசெய்யப்பட்டு ஆசிரமம் ஆக மாற்றப்பட்டிருந்தது.

வென்முரசு! மகாபாரதம் by Writer Jeyamohan

The Great Tamil Writer Jeyamohan started writing greatest Indian epic Mahabharatham in his website. Next ten years daily it is going to be published with all related stories. The real taste of mahabharatham with evrything for human life.
The dubbed one in vijay TV is just like a comic.

Writing under the story name "Venmurasu"
Website: www.jeyamohan.in